ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படம் நாளை ரிலீசாகிறது. இந்த நிலையில் ஜில்லா படத்துக்கு தடைகேட்டு சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தெலுங்கில் வெளிவந்த பாஹீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருந்தோம். ஜில்லா என்ற பெயரை தயாரிப்பாளர் கில்டில் 2008ம் ஆண்டு பதிவு செய்து அதற்கான சான்றிதழ் பெற்றுள்ளோம். இந்த நிலையில் இதே பெயரில் விஜய் நடித்துள்ள ஒரு படமும் ரிலீசாக இருப்பதாக பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக அறிந்தோம். ஜில்லா என்ற டைட்டில் உரிமை எங்களிடம் மட்டுமே உள்ளது. இதே பெயரில் படத்தை வெளியிட்டால் எங்கள் படத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜில்லா என்ற தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை இன்று (ஜனவரி 9) நடக்கிறது.