Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2014 தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!!

03 ஜன, 2014 - 16:45 IST
எழுத்தின் அளவு:

பிளஸ்சும், மைனசுமாக கடந்தது 2013ம் ஆண்டு. இப்போது பிறந்துள்ள 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை ஆண்டாக தெரிகிறது. அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களும் இந்த ஆண்டு ரிலீசாகிறது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்ககும் படங்கள், நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் படங்களும் ரிலீசாகிறது. அதுபற்றி கொஞ்சம் பார்வேர்ட் பண்ணி பார்க்கலாம்.

கோச்சடையான்

2014ம் ஆண்டின் மோஸ்ட்வாண்டட் மூவி. கடந்த ஆண்டே ரிலீசாக வேண்டிய படம். இந்த ஆண்டில் ரிலீசாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி என நட்சத்திர பட்டாளம், மோசன் கேப்சர் டெக்னாலஜியில் ரிலீசாகும் முதல் இந்தியப் படம். 150 கோடி பட்ஜெட். எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படம்.

விஸ்வரூபம்-2

பரபரப்பில் பட்டைய கிளப்பிய விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகம் இந்தப்படம், முதல் பாகத்தில் அமெரிக்காவில் அதிரடி ஆட்டம்போட்ட இந்திய ரா அதிகாரி கமல், இரண்டாம் பாகத்தில், இந்தியாவில் குறிப்பாக சென்னையில் ஆட்டம்போட இருக்கும் படம். 2014ம் ஆண்டின் பாய்ச்சலுக்கு தயாராகிறார் கமல்.

ஜில்லா

இன்னும் சில நாட்களில் பட்டைய கிளப்ப போகிற படம். விஜய் மோகன்லால் என்ற இரு பெரும் ஸ்டார்கள். காஜல் என்னும் ரசகுல்லா. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் படம்.

வீரம்

ஆரம்பத்தில் ஆரம்பித்த ஆட்டத்தை இதிலும் தொடர்கிறார் அஜீத். அதே சால்ட் பெப்பர் லுக். வெள்ளை வேட்டி சட்டை, நான்கு தம்பிகள், தகதக தமன்னாவுடன் ரொமான்ஸ் என அதிர வைக்கப்போகிறார். என்ன நான் சொல்றது.



ஒரு வருடத்திற்கும் மேலாக ஷங்கர் பார்த்து பார்த்து செதுக்கி வரும் படம். விக்ரம் எடைகுறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து கடினமாக உழைத்து நடித்திருக்கும் படம். லண்டன் பொண்ணு எமி ஜாக்சன் சென்னை தமிழ் பேசி நடித்திருக்கிறார். ஏப்ரலில் கலக்க போகிறது ஐ.

அனேகன்

மாற்றானில் தோற்ற கே.வி.ஆனந்தும், மரியான், நய்யாண்டியில் கவிழ்ந்த தனுசும் இணைந்திருக்கும் படம். இருவருக்குமே ஒரு வெற்றி அவசியம் என்தால் கடுமையாக உழைத்து அனேகனை உருவாக்கி வருகிறார்கள்.

கயல்

மைனா, கும்கி வெற்றிக்குப் பிறகு பிரபுசாலமன் இயக்கி வரும் படம். அர்ஜுனன், ஆனந்தி என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். இந்தியா முழுவதும சுற்றும் காதல் கதை.

நிமிர்ந்து நில்

ஜெயம்ரவி நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் படம். ஆதிபகவன் கொடுத்த அடிக்கு மருந்தாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கிறார். அமலாபால் ஹீரோயின். சமுத்திரகனி இயக்கம்.

பூலோகம்

நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் படம். ஜெயம்ரவி-த்ரிஷா ஜோடி. ஜனநாதனின் சீடர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். வட சென்னை பகுதியில் ஒரு காலத்தில் இருந்த குத்துச்சண்டை மோதல் கதை.

ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்

பெரிய இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம். இம்சை அரசன் 23ம் புலிகேசி வெற்றியின் பாதிப்பில் உருவாகும் காமெடி படம். யுவராஜ் இயக்குகிறார்.

இவைகள் தவிர இந்த ஆண்டு ரிலீசாக இருக்கும முக்கிய படங்களின் பட்டியல் இது...

1.லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம்.

2.ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல் நடிக்கும் படம்.

3.கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் படம்.

4.வசந்த பாலனின் காவியத்தலைவன்

5.தனுஷின், 'வேலையில்லா பட்டதாரி'

6.எஸ்.பி.ஜனநாதனின், 'புறம்போக்கு'

7.மகிழ் திருமேனியின், 'மீகாமன்'

8.கார்த்தியின், 'காளி'

9.விஷாலின், 'நான் சிவப்பு மனிதன்'.

10.உதயநிதி ஸ்டாலினின், 'இது கதிர்வேலன் காதல்'

11.சிவகார்த்திகேயனின், 'மான்கராத்தே'

12.ஈரம் அறிவழகனின், 'வல்லினம்'

13.ஜெய்யின், 'திருமணம் என்றும் நிக்காஹ்'

14.விமலின், 'மஞ்சப்பை'

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in