Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

9 படங்களுடன் 2014 கணக்கை துவக்கியது தமிழ் சினிமா!

03 ஜன, 2014 - 14:21 IST
எழுத்தின் அளவு:

கடந்த 2013ம் ஆண்டு சுமார் 152 நேரடி தமிழ் படங்களும் 80 டப்பிங் படங்களும் ரிலீசானது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாகும். இந்த ஆண்டு அதைவிட கூடுதலான எண்ணிக்கையில் படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் சுமார் 400 படங்கள் வரை தயாரிப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு சுமார் 300 படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதில் 50 சதவிகித படங்களே ரிலீசாகியுள்ளது. தணிக்கை செய்யப்பட்டு 150 படங்கள் வரை ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த கணக்குகளை பார்கும்போது 2014ம் ஆண்டு 200 படங்களை தாண்டி ரிலீசாகுமெனத் தெரிகிறது.

அதற்கு கட்டியம் கூறுவது போல இன்று (ஜனவரி 3) வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் 6 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகி உள்ளது. அகடம், என் காதல் புதிது, அத்திமலை முத்துப்பாண்டி, முன் அந்திச் சாரல், கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு, நம்ம கிராமம் ஆகிய படங்கள் ரிலீசாகிறது. இவை எல்லாமே சிறு பட்ஜெட் படங்கள்.

நம்ம கிராமம் 2 வருடங்களுக்கு முன்பே தணிக்கை செய்யப்பட்ட படம். 2011ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருதை பெற்ற படம். இதில் நடித்த மறைந்த நடிகை சுகுமாரி இந்தப் படத்துக்காக சிறந்த குணசித்திர நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.

மலையாளத்தில் வெளிவந்த செல்லுலாயிட் தமிழில் ஜே.சி.டேனியல் என்ற பெயரில் ரிலீசாகி உள்ளது. மலையாள சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜே.சி.டேனியலின் வாழ்க்கை கதை இது. இந்த இரண்டு படங்களுமே அவசியம் காண வேண்டிய அருமையான படங்கள். ரசிகர்கள் எந்த அளவுக்கு வரவேற்பு தரவிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதுதவிர கும்கி வீரன் என்ற ஆங்கில படமும், விக்ரம் தாதா என்ற தெலுங்கு படமும் டப் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in