ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 3 இடத்தில் படத்துக்கு கட் கொடுத்தனர். அந்த கட்டை ஏற்றுக் கொண்டால் யு தவருவதாகவும் இல்லாவிட்டால் யு/ஏ தருவதாகவும் சொன்னார்கள்.
தயாரிப்பாளரும், இயக்குனரும் கட்டுக்கு ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து படத்துக்கு யு சான்றிதழை வழங்கினர். படம் ஜாலியா இருந்ததாகவும், இது ஒரு மாஸ் எண்டர்டயிண்மெண்ட் என்றும் படம் பார்த்த தணிக்கை குழுவினர் கருத்து தெரிவித்தனர். மூன்று கட்டில் இரண்டு ஆக்ஷன் காட்சியில் வரும் வன்முறையும், ஒரு கட் மதுரை பக்கம் சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை என்றும் கூறுகிறார்கள்.
யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் வரிவிலக்கு கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர். நாளை (ஜனவரி 3)வரிவிலக்கு குழுவினர் படத்தை பார்க்கிறார்கள். தமிழ் நாட்டில் சுமார் 600 தியேட்டர்களிலும் கேரளாவில் 300 தியேட்டர்களிலும் வெளியிட இருக்கிறார்கள்.