ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில் அனுஷ்காவுக்கு நேரடி போட்டி நடிகையாக இருந்தவர்தான் தமன்னா. அவர் பேசும் படங்களை இவரும், இவர் பேசும் படங்களை அவரும் கைப்பற்றுவது திரைக்குப்பின்னால் சீரியசாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், பின்னர் தெலுங்கில் அவர்களது மார்க்கெட் சரிந்தபோது வெவ்வேறு மொழிகளில் பயணிக்கத் தொடங்கினார்களாம்.
இந்த நிலையில், தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் பாகுபாலி படத்தில் தற்போது தமன்னாவும் கமிட்டாகியிருப்பதால், அனுஷ்காவுக்கும், தமன்னாவுக்குமிடையே மீண்டும் தொழில்முறை போட்டி வலு பெற்றிருப்பதாக ஆந்திரா மீடியாக்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதோடு, அனுஷ்காவை வெறுப்பேற்ற நினைக்கும் சிலர், அவரை கலாய்க்க வேண்டும் என்பதற்காக, மறுபடியும் உங்களுக்கும், தமன்னாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறதாமே? என்கிறார்களாம். அதனால் துளியும் டென்சன் ஆகவில்லையாம் அனுஷ்கா. காரணம், பாகுபாலி படத்தில் அனுஷ்காவுக்குத்தான் பிரதான நாயகி வேடமாம். தமன்னா ஒரு சிறிய துக்கடா வேடத்தில்தான் வருகிறாராம்.
அதனால், இந்த செய்தியை தனது அபிமானிகள் மூலம் அவசரகதியில் வெளியிட்டு வரும் அனுஷ்கா, ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி, பாஹ்மதி ஆகிய 3 படங்களிலுமே என்னை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறது. இதில் மற்ற நடிகைகள் திணிக்கப்பட்டாலும், சப்போர்ட்டிங் வேடங்களாக மட்டுமே இருக்கும். அவர்களால் எனக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் செய்தி வெளியிட்டு வருகிறார் அனுஷ்கா.