மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விஜயசேதுபதியின் வித்தியாசமான கதை செலக்சன் காரணமாக அவர் நடித்த படங்களின் ரீமேக் ரைட்சே பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், அவர் நடித்த பீட்சா படத்துக்கு, இந்திய படங்களுக்கு வழங்கப்படும் இத்தாலியின் ரிவர் டு ரிவர் என்ற விருது கிடைத்திருக்கிறது. அதோடு, ஒரு பெரிய தொகை பணமும் கிடைத்துள்ளதாம்.
அதோடு,இந்த விழாவுக்கு வந்திருந்த ஒரு ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பீட்சா படத்தின் ஹாலிவுட் உரிமையை வாங்கியுள்ளாராம். மற்றவர்களைப்போன்று இப்படத்தை ரீமேக் செய்யாமல், அப்படியே மொழி மாற்றம் மட்டுமே செய்து வெளியிடுகிறாராம். அதனால் இப்படம் மூலம் பீட்சாவில் நடித்த மொத்த கலைஞர்களும் ஹாலிவுட் திரைகளிலும் ஜொலிக்கப்போகிறார்கள்.
அதுமட்டுமின்றி, ஹாலிவுட்டைப்பொறுத்தவரை ஒரு படத்தை வெளியிடும் உரிமை வாங்கினால், அந்த தயாரிப்பாளருக்கு மட்டுமின்றி, அதில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்குமே உரிய சன்மானத்தையும் கொடுப்பார்களாம். அந்த வகையில், விஜயசேதுபதி, ரம்யா நம்பீசன் உள்பட அனைவருக்குமே டாலர் மதிப்பில் பெரிய தொகையும் கைமாறுகிறதாம்.
அதனால் ஏற்கனவே பெயரையும் புகழையும சம்பாதித்துக்கொடுத்த பீட்சா, தொடர்ந்து பணம், விருது என்று வாங்கிக்கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை சந்தோசப்படுத்தி வருகிறது.