Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2013ல் சினிமாவை அழகாக்கிய அழகிகள்

29 டிச, 2013 - 16:10 IST
எழுத்தின் அளவு:

காற்றும் நீரும் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்படித்தான் ஹீரோயின்கள் இல்லாத சினிமாவையும் கற்பனை செய்ய முடியாது. என்னதான் ஹீரோயின்களை கடுமையாக விமர்சனம் செய்தாலும் அந்த அழகிகள் உலவாவிட்டால் சினிமா வறண்டு போய்விடும். 2013ம் ஆண்டு தன் அழகால் சினிமாவை அழகாக்கிய அழகிகள் பற்றி பார்க்கலாம்.
ஹன்சிகா: சிம்புவுடன் காதல், பின்பு பரிவு, ஆந்திரத்து ஹீரோவுடன் புது காதல், அம்மாவுடன் கருத்து வேறுபாடு என ஆயிரம் கிசுகிசுவில் சிக்கினாலும் ஹன்சிகா தன் படங்களில் தீவிரம் கவனம் செலுத்தினார். அதனால் இந்த ஆண்டு சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி என 4 படங்களில் நடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதில் சேட்டை தவிர மற்ற அனைத்தும் அவருக்கு வெற்றிப் படங்கள்தான்.
அனுஷ்கா: ஆறடி அனுஷ்காவுக்கு இந்த ஆண்டு அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் என மூன்று படங்கள். அவரைப் பொறுத்தவரை மூன்றுமே சரியாக அமையவில்லை. அலெக்ஸ் பாண்டியன் பிளாப், இரண்டாம் உலகம் பட்ட கஷ்டமெல்லாம் பாழாய்ப்போன படம். சிங்கம் 2 ஹிட்டானாலும் அவரது கேரக்டர் பேசப்படவில்லை.
நயன்தாரா: நயன் நடிச்சது இரண்டே படம்தான். இரண்டுமே ஹிட்டு, அவர் காட்டில் பெய்தது துட்டு மழை. ராஜாராணியில் ரொமான்ஸ், ஆரம்பத்தில் ஆக்ஷன் கிளாமர்னு எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடினார்.
நஸ்ரியா: நேரம் படத்தின் மூலம் வந்த நல்ல நேரம் நஸ்ரியாவுக்கு எல்லாமே ஜெயம்தான். ராஜாராணியில் இமேஜ் எகிற நய்யாண்டியில் கொஞ்சம் இறங்கியது. சின்ன தொப்புள் பிரச்சினையை பெருசாக்க இண்டஸ்ட்ரி அவரை பார்த்து பயந்தது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.
த்ரிஷா: சினிமாவுக்கு வந்து பத்து வருஷமானலும் இப்பவும் பிரிஜ்லேருந்து எடுத்த ஆப்பிள் மாதிரிதான் இருக்கிறார். சமர் கைவிட்டது. என்றென்றும் புன்னகை அவருக்கு புன்னகையை கொடுத்தது.
லட்சுமி மேனன்: இன்றைய தேதிக்கு ராசியான நடிகையா இருக்கிறவர் இவர். லட்சுமியின் தேதிக்காக பணப்பையுடன் வீட்டு வாசலில் ரேஷன் கடை கியூதான். இந்த ஆண்டு நடித்த குட்டிப்புலி, பாண்டியநாடு இரண்டுமே லட்சுமியிடம் லட்சுமியை குவித்தது.
டாப்ஸி: வெள்ளாவி பொண்ணுக்கு இந்த வரும் இரண்டு படங்கள்தான் கிடைத்தது. இரண்டிலுமே இணை ஹீரோயின்தான். ஆரம்பம், மறந்தேன் மன்னித்தேன். டாப்ஸி டாப்புக்கு வர இன்னும் கடுமையா உழைக்கணும்.
ப்ரியா ஆனந்த்: எதிர்நீச்சல் நல்ல இடத்தை கொடுத்துது. வணக்கம் சென்னையில் அதை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டார்.
பிந்து மாதவி: கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா ஹிட்டாக பிந்து பிசியாகிவிட்டா£ர். இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கமும் ஹிட்டாக வருத்தப்படாத நடிகைகள் சங்கத்தில் இணைந்து விட்டார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sakthi - cbe  ( Posted via: Dinamalar Android App )
30 டிச, 2013 - 22:22 Report Abuse
sakthi தி்வ்யா தான் நம்பர் ஒன்
Rate this:
நல்லுறைவன் - இராமநாதபுரம்,இந்தியா
30 டிச, 2013 - 11:22 Report Abuse
நல்லுறைவன் ஸ்ரீ திவ்யாவை மறந்து விட்டீர்களே நஸ்ரியாவை விட ஸ்ரீ திவ்யா எவ்வளவோ சிறந்தவர்
Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
29 டிச, 2013 - 23:09 Report Abuse
JAY JAY இந்த வருடத்தின் டாப் 5 ஹீரோயின் 1. நயன்தாரா - இரண்டு படத்திலும் அசத்தல் வெற்றி... அசத்தல் நடிப்பு இதனால் நிச்சயம் முதலிடம் இவருக்கு தான்.. 2. லக்ஷ்மி மேனன் - பாண்டிய நாட்டின் ஒரு பாடலே போதும்... இவரை தூக்கி நிறுத்தி விட்டது... 3. ஸ்ரீ திவ்யா - புதுமுகம் என்றாலும் கவர்ந்திழுக்கும் ஊதா கலரு ரிப்பன் நாயகி. ஒரே படத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் ..4. திரிஷா - வருட இறுதியில் ஒரு வெற்றி படத்தை கொடுத்துவிட்டார், என்றென்றும் புன்னகையில்... இவரது நடிப்பு கடைசி நிமிடத்தில் இவருக்கு கை கொடுத்து விட்டது... 5. நஸ்ரியா - நேரம், மற்றும் ராஜா ராணியில் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியவர்.. [ மற்றபடி ஹன்ஷிகா அல்லது அனுஷ்கா ஆகியோர் ஒன்றிரண்டு வெற்றிப்படங்களில் இருக்கிறார்கள் ..அவ்வளவு தான்.. நடிப்ப்பில் ஒரு படத்தில் கூட முத்திரை பதிக்க வில்லை என்பதே உண்மை.. ] ...
Rate this:
karthigeyan - bangalore,இந்தியா
30 டிச, 2013 - 10:27Report Abuse
karthigeyanஇந்த வருடம் நயன்தார அசத்தல் நடிப்பு ராஜா ராணி யில் மட்டும் தான்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in