ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீபாவளி, பொங்கல் போன்று சின்னத்திரைக்கு கொண்டாட்டமான நாள் ஆங்கிலப் புத்தாண்டு. 31ந் தேதி மாலை தொடங்கி 1ந் தேதி இரவு வரை பார்வையாளர்களை கவர சேனல்கள் கடும் போட்டியில் குதிக்கும். இதில் முக்கிய இடம் வகிப்பது சினிமா.
புத்தம்புது படங்களை வாங்கி "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக. திரைக்கு வந்து சில நாட்களே ஆன" என்று கத்தப் போகிறார்கள். இது ஒரு புறம் இருக்க நடிகர் நடிகைகளை வைத்து புத்தாண்டு கலாட்டா நிகழ்ச்சிகளை மும்முரமாக தயாரித்து வருகிறார்கள்,
ஏவிஎம், பிரசாத் ஸ்டூடியோக்கள், பிலிம் சிட்டியில் உள்ள ஏசி புளோர், தனியார் தொலைக்காட்சிகள் வைத்திருக்கும் புளோர்கள் அத்தனையும் நிரம்பி வழிகிறது. முன்னணி நடிகர் நடிகைகள்கூட படப்பிடிப்புகளை தள்ளி வைத்துவிட்டு தொலைக்காட்சிகளின் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள். பங்கேற்கும் நடிகர் நடிகைகளுக்கு கணிசமான தொகையை சேனல்கள் வழங்குகிறது.
முன்பெல்லாம் புத்தாண்டு சிறப்பு பேட்டிக்கு நடிகர் நடிகைகள் ஆர்வமாக வருவார்கள். நம்மை அழைக்க மாட்டார்களா என்று ஆர்வமா இருந்தார்கள். இப்போது சேனல்களிடையே நடக்கும் போட்டி காரணமாக சிறப்பு பேட்டிக்குகூட நடிகர் நடிகைகளுக்கு சேனல்கள் பெரும் தொகையை சன்மானமாக கொடுக்கிறது. அதிக தொகை கொடுக்கும் சேனல்களுக்கே பேட்டி கொடுக்கப் போகிறார்கள்.
பேட்டியில் போய் உட்கார்ந்து கொண்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் சொல்லி புத்தாண்டு வாழ்த்து சொல்வார்கள். ஒரு காலத்தில் நயா பைசா செலவில்லாமல் புத்தாண்டு நிகழ்ச்சிகளை தயாரித்த சேனல்கள். இப்போது அதற்கு கோடிக் கணக்கில் செலவு செய்கிறது. புத்தாண்டு சேனல் பார்வையாளனுக்கு நல்ல ஆண்டா இல்லையா என்பது தெரியாது. ஆனால் நடிகர் நடிகைகளுக்கு பணமழையுடன் புத்தாண்டு தொடங்குகிறது என்பது மட்டும் உறுதி.