ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் வடகறி. இதில் ஜெய், சுவாதி சுப்பிரமணியபுரத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். யுவன் மியூசிக். இந்தப் படத்தில் பிரபல நீலப்பட நடிகையும் ஜிம்ஸ்&2 இந்திப் படத்தில் அறிமுகமானவருமான சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்.
இந்த பாடல் காட்சியை தமிழ்நாட்டில் எடுத்தால் பிரச்சினை ஏதும் ஏற்படலாம் என்று கருதிய படக்குழுவினர். பாடல் காட்சியை தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் அருகில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான தீவில் படமாக்கி வருகிறார்கள். இதில் ஜெய் வேட்டி கட்டி ஆட. சன்னி சேலை, பாவாடை தாவணி கட்டி ஆடுகிறார். தீவைச் -சுற்றி வெவ்வேறு லொக்கேஷன்களில் ஆடுகிறார்களாம். சன்னியின் ரசிகரான ஜெய்யின் கனவு பாடலாம் அது.
வெங்கட் பிரபுவின் உதவியாளர் சரவணராஜன்தான் டைரக்டர் "இது காமெடி த்ரில்லர் படம். ஒரு ஸ்டார் அட்ராக்ஷனுக்காகத்தான் சன்னியை ஆட வைக்கிறோம். மற்றபடி கதைக்கும் அவருக்கும் தொடர்பில்லை" என்கிறார்.