ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாரதிராஜாவின் மைத்துனர் விஜயமனோஜ்குமார். இதுவரை 23 படங்களை டைரக்ட் செய்துள்ளார். 24வது படமாக உயிருக்கு உயிராக என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இதனை மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி தயாரிக்கிறார். சஞ்சீவ், சரண், நந்தனா, ப்ரீத்திதாஸ், பிரபு நடிக்கிறார்கள்.
இந்த படம் எஸ்.ஆர்.எம்.கல்லூரி மாணவர்கள் பற்றியது. எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படித்து முடித்த மாணவர்கள் சிலர் உலகத்துக்கே பயன்படக்கூடிய ஒரு அற்புதமான கருவியை கண்டுபிடிக்கிறார்கள். அதனை பலகோடி கொடுத்து வாங்க வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகிறது. அதனை கடத்திச் செல்ல சில சமூகவிரோத கும்பல்கள் முயற்சி செய்கிறது. அதனை காப்பாற்றி எப்படி அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்கள் என்பது படத்தின் ஸ்டோரி. இதில் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் சிலர் நடித்திருக்கிறார்கள். பெரும் பகுதி படம் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எம். பல்கலைகழத்தின் இணை வேந்தர் பாரிவேந்தர் ஒரு காட்சியில் இணைவேந்தராகவே தோன்றியிருக்கிறார்.
அதை விட முக்கியம் இந்தப் படத்தை எஸ்.ஆர்.எம் குழுமத்தைச் சேர்ந்த மூவேந்தர் மூவீஸ் நிறுவனமே வாங்கி ரிலீஸ் பண்ணுகிறது. கோவைத் தம்பிக்கு சனிக்கிழமை செண்டிமெண்ட் உண்டு. தன் படங்களை சனிக்கிழமையில்தான் வெளியிடுவார். அந்த வகையில் இந்தப் படத்தையும் ஜனவரி 25ந் தேதி சனிக்கிழமை ரிலீஸ் பண்ணுகிறார்.