ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிராமத்து கதைகளில் நடித்து வந்த விதார்த் முதன் முறையாக தமிழ் மலையாள மொழிகளில் தயாராகும் அருத்தாபத்தி படத்தின் மூலம் மல்லுவுட்டுக்கு செல்கிறார். அருத்தாபத்தி என்றால் சொன்ன சொல்லில் இருந்து சொல்லாத பொருளை விளங்க வைப்பதை குறிக்கும் சங்க இலக்கிய வார்த்தையாம். மலையாளத்திலும் இதே பொருள்தானாம். விதார்த் ஜோடியாக ஐஸ்வர்யா தத் என்பவர் அறிமுகமாகிறார். தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஆதிரா ஆகியோரும் நடிக்கிறார்கள். மலையாள இயக்குனர் வினயனின் உதவியாளர் சஜீன் வர்க்கீஸ் டைரக்ட் செய்கிறார். ஜாசிகிப்ட் மியூசிக், நவாஸ் கேமராமேன்.
இதில் நடிப்பது பற்றி விதார்த் கூறியதாவது: இது சஸ்பென்ஸ் திரில்லர் கதை. பறந்து அடிக்கிற மாதிரியோ பன்ஞ் டயலாக் பேசுற மாதிரியான ஆக்ஷன் படமோ இல்லை. கதை பிடித்திருந்ததால் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். மலையாளத்திலும் தயாராவது சந்தோஷமாக இருக்கிறது. கலைக்கு மொழி வித்தியாசம் இல்லை. நல்ல கதைகள் கிடைத்தால் மலையாளப் படங்ளிலும் நடிப்பேன் என்றார்.