ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்யாவுடன் ஜோடியாக வந்ததால் அவரது காதலி என்பதா? என்றார் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே. கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரேவும், ஆர்யாவும் காதலிக்கிறார்கள் என்று தமிழ் மற்றும் கன்னட படவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி ஷர்மிளா கூறியதாவது: சமீபகாலமாக என்னை தொலைபேசியில் அழைக்கும் தோழிகளும், நண்பர்களும் ஆர்யாவை காதலிக்கிறீர்களாமே? என்றே கேட்கிறார்கள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுவெறும் வதந்திதான். என்னை யாருடனாவது ஜோடி சேர்த்து பேசுவது, கதை கட்டி விடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் ஆர்யா மீது ஆர்வமோ, காதலோ எனக்கு இல்லை. நாங்கள் காதல் ஜோடி கிடையாது. கடந்த மாதம் மைசூரில் சிக்கு புக்கு படபிடிப்பு நடந்தது. அதே இடத்தில் கன்னட படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். மதிய உணவு இடைவேளையில் நான், ஆர்யா, ஸ்ரேயா என இரு பட நட்சத்திரங்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அவ்வளவுதான். ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றிலும் நாங்கள் ஜோடியாக வந்ததாகச் சொல்கிறார்கள். அப்போதுகூட மாதவன், ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா, ஜெனிபர் கோத்வல் என ஒரு நட்சத்திர கூட்டமே பங்கேற்றோம். இதை வைத்துக்கொண்டு காதலிக்கிறார்கள் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இது பற்றி ஆர்யாவிடமே நான் கூறினேன். அதைக் கேட்டு சிரித்தார். இவ்வாறு ஷர்மிளா மந்த்ரே கூறினார்.