மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
இந்திய சினிமாவில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பட தயாரிப்பு செய்து வரும் நிறுவனம் ஏ.வி.எம்., ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரில் தொடங்கி, அதன்பிறகு ஏ.வி.எம். சரவணன், பிறகு அவரது வாரிசு ஏ.வி.எம். குகன் என்று வளர்ந்த இவர்களது தயாரிப்பு துறை இப்போது நான்காவது தலைமுறையையும் எட்டியுள்ளது. குகனின் பெண் வாரிசுகள் அபர்ணா குகன், அருணா குகன் 55 நிமிடம் ஓடக்கூடிய படம் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அபர்ணா குகன், அருணா குகன் கூறியிருப்பதாவது, 'கசப்பு இனிப்பு' என்ற குறும்படத்தை யூ-டூயூப்பில் பார்த்தோம். அந்த குறும்படம் எங்களை கவர்ந்தது. உடனே அந்த டைரக்டரை அழைத்து இதை கொஞ்சம் பெரிய படமாக இயக்க முடியுமா என்று கேட்டோம். அதன்படி இயக்குனர்கள் அணில் மற்றும் ஹரிஸ்ரீ ஆகிய இருவரும் 'இதுவும் கடந்து போகும்' என்ற பெயரில் 55 நிமிடம் ஓடக்கூடிய படத்தை உருவாக்கி தந்தார்கள். இப்படத்தை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இணையதளம், டி.வி., மூலம் ரிலீஸ் செய்ய உள்ளோம். எதையாவது புதுசாக செய்யணும் என்ற ஆர்வம் தான் எங்களை இந்தப்படத்தை இப்படி ரிலீஸ் செய்ய வழிவகுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.