இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கன்னையா காலமானார். அவருக்கு வயது 76. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின், அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் திடீர் கன்னையா. சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மூச்சு திணறல் காரணமாக கடந்த இரு வாரங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று(நவ., 17ம் தேதி) அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
மறைந்த கண்ணையாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். கன்னையாவின் உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(18ம் தேதி) அயனாவரத்தில் உள்ள மயானத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.