Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் போன்று முன்னணி ஹீரோயினி கேட்கும் விமல்!

02 நவ, 2013 - 15:11 IST
எழுத்தின் அளவு:

பசங்க, களவாணி, வாகை சூடவா தொடங்கி தேசிங்கு ராஜா வரை பல படங்களில் நடித்திருப்பவர் விமல். மினிமம் கியாரண்டி ஹீரோவாகியிருக்கும் அவர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். மேலும், வளர்ந்து வரும் முக்கிய ஹீரோக்களான சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி வரிசையில் விமலும் படாதிபதிகளின் பாக்கெட்டுக்கு பங்கம் விளைவிக்காத ஹீரோ என்ற பெயரையும் மார்க்கெட்டில் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், இதுவரை மினிமம் பட்ஜெட் படங்களாக நடித்திருக்கும் விமலுக்கும அடுத்தபடியாக தனது லெவலை உயர்த்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், இதுவரை வெறும் காமெடி கலாட்டா கதைகளாக தேர்வு செய்து வந்தவர், இப்போது அதே காதல் காமெடி என்றாலும் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும்படியான ஓரளவு பெரிய பட்ஜெட் படங்களாக தேடுகிறாராம்.

மேலும், ஓவியா, அஞ்சலி, பிந்துமாதவி போன்ற ஹீரோயினிகளுடன் மட்டுமே டூயட் பாடி வரும் விமலுக்கு மேல்தட்டு முன்னணி ஹீரோயினிகளுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசையும் துளர் விட்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிவகார்த்திகேயன்தானாம். மெரினா படத்தில் ஓவியாவுடன் நடித்த அவர், தற்போது மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்.

இதனால் மூன்றாம் தட்டு ஹீரோவாக இருந்த அவர் தற்போது இரண்டாம் தட்டு ஹீரோவாகி பாஸ் பண்ணி விட்டார். இதனால் தானும் மேல்தட்டு கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்தாவது தனது ஹீரோ இமேஜை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விமல், அடுத்து சேட்டை பட டைரக்டர் கண்ணன் இயக்கும் படத்தில் நடிப்பவர், முன்னணி ஹீரோயினி யாரிடமாவது கால்சீட் வாங்குங்கள் என்று கூறியிருக்கிறாராம். இதனால், விமலின் ஆசையை நிறைவேற்ற மேல்தட்டு ஹீரோயினிகளிடம் கால்சீட்டு கேட்டு துரத்தி வருகிறார் கண்ணன.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
06 நவ, 2013 - 13:20 Report Abuse
சு கனகராஜ் எதற்கு இந்த வேண்டாத ஆசை விமலுக்கு
Rate this:
santhosh - coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
02 நவ, 2013 - 23:14 Report Abuse
santhosh முகம் பார்கும் கண்ணாடி இருக்கா வீட்ல
Rate this:
Dr.Pavul Raj - Izatnagar,இந்தியா
03 நவ, 2013 - 11:48Report Abuse
Dr.Pavul Rajஉங்க வீட்ல இருக்கா ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in