Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலி மாதிரி நடிகைகளை செருப்பால் அடிப்போம் - தயாரிப்பாளர்கள் சார்பில் ஜாக்குவார் தங்கம் பேச்சு!!

30 அக், 2013 - 17:47 IST
எழுத்தின் அளவு:

 அறிமுக இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள ‘‘வலியுடன் ஒரு காதல்’’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல்.நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் மு.களஞ்சியம், மனோஜ் குமார், ‘சிலந்தி’ ஆதிராம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் சித்ரா லெட்சுமணன், விஜய முரளி உள்ளிட்ட திரளான வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய களஞ்சியம், திரையுலகில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் உள்ளன. ஆனாலும் சிறிய முதலீட்டில் இந்த ‘‘வலியுடன் ஒரு காதல்’’ மாதிரி உருவான எனது ‘‘ஊர்சுற்றி புராணம்’’ திரைப்படத்தில் இருந்து நடிகை அஞ்சலி பாதியில் ஓடிவிட்டார். இதுபற்றி எத்தனையோ முறை மேற்படி சங்கங்களிடம் நான் புகார் கொடுத்து விட்டேன். யாரும் அதைப்பற்றி என்ன ஏது என்று கூப்பிட்டு விசாரிக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்‌லை.

ஒரு தயாரிப்பாளர் பல கோடி ரூபாய் போட்டு இந்தமாதிரி சிறிய படங்களில் முதலீடு செய்து, படம் வெளிவரும் என நம்பிக்கையில் இருக்கையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை பேசித் தீர்க்கத்தானே இதுமாதிரி சங்கங்கள் உள்ளது. ஆனால் அவர்கள், அவர்களது கடமைகளை செய்வதில்லை. தமிழ் சினிமாவில் புதிய சிறு தயாரிப்பாளர்கள் வருவது அஞ்சலி மாதிரி நடிகைகளால் கேள்விக்குறியாகி உள்ளது. அப்புறம் எப்படி சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை நோக்கி வருவார்‌கள், தமிழ் சினிமா தொழிலாளர்கள் எவ்வாறு பிழைப்பார்கள், இதற்கெல்லாம் இதுமாதிரி சங்கங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், எனது ‘‘ஊர்சுற்றி புராணம்’’ வெளிவர வேண்டும் என்று வீராவேசமாக பேசி அமர்ந்தார்.

இதற்கு உடனடியாக அவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக ஏற்கனவே பேசி அமர்ந்த ஜாக்குவார் தங்கம், மீண்டும் எழுந்து இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்கமாட்டோம். இந்த பிரச்னைக்கு இன்றே தீர்வு காண களமிறங்குவோம், அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம். இனி இதுமாதிரி பிரச்னைகளில் நடிகைகள் பாதியில் கழன்று கொண்டார்கள் என்றால் அவர்களிடம் பேசி மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் அல்லது அதுவ‌ரை அப்படப்பிடிப்பிற்கான செலவை வட்டியுடன் வசூலிப்பது என முடிவெடுப்போம். கில்டில் செயலாளராக இருக்கும் நான், தற்போதைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினர் எனும் பொறுப்புடன் பேசுகிறேன். தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் சிறுமுதலீட்டு படங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பவர், அவரிடம் உங்கள் புகாரை ஒரு முறை அளியுங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறியது அரங்கத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டது.

நடிகைகளை செருப்பால் அடிப்போம் என தயாரிப்பாளர்கள் சார்பில் ஜாக்குவார் தங்கம் பேசியதற்கு நடிகர் சங்கத்தின் பதில் என்ன என்பது இனி தான் தெரியவரும்.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
01 நவ, 2013 - 00:21 Report Abuse
Vasudevan Srinivasan அநாகரீகமான பேச்சு.. ஏதாவது பிரச்சினை என்றால் சம்பந்த பட்ட சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொன்னால் அது நியாயம். இப்படி கீழ்த்தரமாக பேசுவது ஒரு பொறுப்பான மனிதரின் செயல் அல்ல. வெட்கக்கேடு
Rate this:
murukananthan - Sydney,ஆஸ்திரேலியா
31 அக், 2013 - 16:09 Report Abuse
murukananthan Who is this black sheep களஞ்சியம்? தமிழ் சினிமாவுக்கே அழுக்கு களஞ்சியம் போன்ற தீயவர்களால்.
Rate this:
Sirippou Singaram - கு,இந்தியா
02 நவ, 2013 - 09:15Report Abuse
Sirippou Singaramஅது ஒண்ணும் இல்ல..இந்த நாய் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சான் அதுதான் அந்த பெண்ணு ஓடி போச்சு........
Rate this:
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
31 அக், 2013 - 12:53 Report Abuse
S.MAHESH KUMAR செருப்பால் அடிக்குமளவுக்கு அஞ்சலி தகுதியானவளா(ரா)?
Rate this:
seran - chidambaram,இந்தியா
31 அக், 2013 - 12:25 Report Abuse
seran செருப்பால் அடிப்பதா பிரச்சனைக்கு தீர்வு பொது இடங்களில் பேசுபவர்கள் சற்று நிதானமுடன் பேசுவது நன்று
Rate this:
D.Devendran - Bangalore,இந்தியா
31 அக், 2013 - 12:11 Report Abuse
D.Devendran Stupid talk.....................................bullshit..............................
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in