ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி | வசூலில் வெற்றி பெற்றதா டூரிஸ்ட் பேமிலி | ரெட்ரோ முதல் நாள் வசூல் முழு விவரம் | தங்களது படங்களை லண்டனில் பார்த்த சிம்ரன், பூஜா ஹெக்டே | 'ரெட்ரோ' படத்தில் இடம் பெற்ற 'செனோரீட்டா'.... இளையராஜாவின் பாடல் | நடிகர்கள் அணிந்துள்ள முகமூடி : மாளவிகா மோகனன் | கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து | மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது | மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு |
அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் நடிப்பில் ரசிகர்களுக்கு தீபாவளி போனசாக வெளியாகயிருக்கும் படம் ஆரம்பம். பில்லா படத்தை இயக்கிய அஜீத்தின் லக்கி இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இப்படத்தில் மங்காத்தாவில் நடித்தது போலவே நரை முடி கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜீத். அதேசமயம், ஜீன்ஸ்-டீசர்ட் என்று யூத்தை மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறாராம். கூடவே, இப்படத்துக்காக அவர் எடுத்த ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் அனைத்தும் அஜீத்தின் பாடி லாங்குவேஜையே வித்தியாசப்படுத்தியிருக்கிறதாம். அதனால் ஆரம்பம் அஜீத் அசத்தல் அஜீத் என்கிறார்கள்.
மேலும், உளவுத்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள அஜீத், ஒரு கட்டத்தில் பக்கா ஹாலிவுட் நடிகர்கள் போன்றே பர்பாமென்ஸ் செய்திருக்கிறாராம். அவரது நடை உடை எல்லாமே தலயின் தலயாய ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்குமாம். அந்த அளவுக்கு தனது தரத்தை இப்படத்தில் உயர்த்திக்காட்டியிருக்கிறாராம் தல அஜீத்.
இப்படம் டை ஹார்ட், ஸ்வார்டு பிஷ் போன்ற ஹாலிவுட் படங்களின் சாயலில் அவுட்புட் வந்திருப்பதாக சொல்லும் ஆரம்பம் படக்குழுவினர், இது அஜீத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்கிறார்கள்.