Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தின் ஆரம்பம்...! தினமலரில் இனி தினம் ஒரு அதிரடி சுவாரஸ்ய தகவல்...!!

22 அக், 2013 - 15:29 IST
எழுத்தின் அளவு:

இந்தாண்டு ‘தல’ ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும். ‘பில்லா’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன், அஜீத் கூட்டணியில் உருவாகியிருக்கும் மற்றுமொரு பிரமாண்ட படம் தான் ‘‘ஆரம்பம்’’. முற்றிலும் வித்தியாசமான கதைய‌ம்சத்துடன் ‘‘ஆரம்பம்’’ படம் உருவாகி இருக்கிறது. மங்காத்தா படத்‌‌தை போல ஆரம்பம் படத்திலும் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஸ்‌டைலில் நடித்திருக்கிறார் அஜீத். கூடவே அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா, அதுல் குல்கர்னி என்று ‌ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

டுகாட்டி பைக்கில் அதிவேகமாக செல்லும் அஜீத்தின் பைக் ரைடிங், டூப் இல்லாமல் கார் சண்டைக்காட்சி என்று ‘‘ஆரம்பம்’’ படத்தில் அஜீத், கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கிறார். யுவனின் மிரட்டல் இசை, ஓம் பிரகாஷின் மிளிரும் ஒளிப்பதிவு என்று படத்தின் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. மேலும் படத்தில் இடம்பெற்று இருக்கும் ‘‘ஸ்டைலிஷ் தமிழச்சி...’’ உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் இடை‌யே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகிவிட்டது. தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னர் அக்., 31ம் தேதி வியாழக்கிழமை, ‘‘ஆரம்பம்’’ படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களில் ஆரம்பம் படம் வெளியாகும் என தெரிகிறது. ரசிகர்கள் தங்களது ‘தல’யின் படத்தை வரவேற்க இப்போதே தலை தூக்கிவிட்டார்கள்.

இதற்கிடையே ஆரம்பம் படம் தொடர்பான பல்வேறு தகவல்களை இனி தினமலர் இணையதளத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். ஆரம்பம் படத்தின் ஸ்டில்கள், டிரைலர்கள், வால்பேப்பர்கள், ஷூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட பலவும் தினமலர் இணையதளம், சினிமா பகுதியில் வெளியாகி உள்ளது. இதுதவிர ஆரம்பம் படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களும் இனி தினமலர், சினிமா பகுதியில் தினமும் வெளியாகும் என்பதை வாசகர்களுக்கும், ‘தல’யின் ரசிகர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.

Advertisement
கருத்துகள் (98) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (98)

MOHAMED NATHARSA - karaikal,இந்தியா
25 அக், 2013 - 00:30 Report Abuse
MOHAMED NATHARSA ajith vazhga.
Rate this:
eric - pondy  ( Posted via: Dinamalar Android App )
23 அக், 2013 - 16:48 Report Abuse
eric அடுத்த FLOP READYA... சீக்கிரம் பண்ணுங்க..
Rate this:
23 அக், 2013 - 14:47 Report Abuse
மணிகண்டன் தல அபூர்வபிறவி.படம் வெற்றிபெறவாழ்த்துக்கள்
Rate this:
mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
23 அக், 2013 - 14:19 Report Abuse
mark வெற்றி என்றால் ஆடாமலும் தோல்வியென்றால் துவண்டு பபோகாமலு இருக்கும் நல்ல மனிதர் நல்ல மனிதர்கள் எல்லோருக்கும் இந்த உண்மை தெரியும்
Rate this:
ramesh - trichy,இந்தியா
23 அக், 2013 - 13:05 Report Abuse
ramesh மிக்க நன்றி உங்களுக்கு வாழ்க தினமலர் வாழ்க தல ....
Rate this:
மேலும் 93 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in