ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் புதிய படமான தமிழ் படத்தில் நடிகை கஸ்தூரி நடிக்கிறார். ரீ-எண்ட்ரிக்காக துடித்துக் கொண்டிருக்கும் கஸ்தூரி இந்த படத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சியையெல்லாம் காட்டி கலக்கியிருக்கிறாராம். டைரக்டர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் நாயகனாக சென்னை 28 புகழ் நடிகர் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த தீஷாபாண்டே நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் ஹிட் ஆன படங்களை எடுத்துக் கொண்டு அதில் இருந்த கதையை உருவாக்கியிருக்கிறாராம் டைரக்டர் அமுதன். முழுநீள காமெடிப்படமான இப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட மூத்த காமெடி நடிகர்கள் கூட கல்லூரி மாணவர்களாக வேடம் கட்டியிருக்கிறார்கள். அதோடு முன்னணி நடிகர்கள் பலரையும் ஈவு இரக்கம் இல்லாமல் ரவுண்டு கட்டி பஞ்சர் ஆக்கியிருக்கிறார்கள் என்பதும் கொசுறு தகவல்.