Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

01 அக், 2013 - 12:34 IST
எழுத்தின் அளவு:

 விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்ற வி.சி.கணேசன் 8 வயதில் நாடகை கொட்டகைக்குள் நுழைந்தார். திருச்சி தேவர் ஹால் ஒரு மகா கலைஞனின்  பாதங்களை தாங்கும் பாக்கியம் பெற்றது. மராட்டிய மாவீரன் சிவாஜி கேரக்டரில் வாழ்ந்ததால் தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டு அதுவே நிலைத்த பெயரும் ஆனது. மக்கள் கொடுத்த பட்டம் நடிகர் திலகம்.

* பராசக்தி சிவாஜியின் முதல் படம் அல்ல. பூங்கோதைதான் சிவாஜயின் முதல் படம். அதனை தயாரித்தவர் நடிகை அஞ்சலிதேவி. அதற்காக சிவாஜி பெற்ற முதல் சம்பளம் 101 ரூபாய். முதலில் வெளிவந்தது பராசக்தி, பணம், பரதேசி, படங்களுக்கு பிறகே பூங்கோதை வெளிவந்தது. ஆள் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறார் என்று 3 மாதம் சத்துணவு கொடுக்கப்பட்டு பின்னர் பராசக்தியில் நடிக்க வைக்கப்பட்டார்.

* மனோகரா சிவாஜிக்கு ஹீரோ அந்ததஸ்தை கொடுத்தது. அதன் பிறகு 300 படங்களை தாண்டியது அவரது சாதனை.

* பரமசிவன், கிருஷ்ணன், முருகன், போன்ற கடவுள்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.

* வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், சாம்ராட் அசோகன், சிவாஜி உள்ளிட்ட பல சரித்திர புருஷர்களை அடையாளம் காட்டியவர்

* பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கண் முன் நிறுத்தியவர்.

* உலகமே அவரை சிறந்த நடிகர் என்று புகழ்ந்தபோதும் இந்திய அரசு அவரை சிறந்த நடிகராக தேர்வு செய்ததே இல்லை.

* இருந்தபோதும் மத்திய அரசியின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, தெலுங்கு அரசின் என்டிஆர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

* நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அக்காலத்திய நடிப்பு பாணியை பின்பற்றினார். அதனை சிலர் ஓவர் ஆக்டிங் என்று விமர்சனம் செய்தார்கள். பிற்காலத்தில் முதல் மரியாதை, தேவர்மகன், படையப்பா, படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அவர்கள் வாயை அடைத்தார்.

* காமராஜரின் தொண்டராக காங்கிரசில் இணைந்தார். பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சி தொடங்கினார். அரிதாரத்தில் ஜெயித்த சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. நான் சாகும்வரை அன்னை இல்லத்துக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று அறிவித்தார்.

* சினிமாவில் சாதனை படைத்தாலும் தன் வீட்டுக்குள் சினிமா வராமல் பார்த்துக் கொண்டார். அவரது நடிப்பு வாரிசாக பிரபு சினிமாவில் ஜெயித்தார். இப்போது பிரபுவின் மகன் விக்ரம் அன்னை இல்லத்தின் வாரிசாக சினிமாவில் வலம் வருகிறார்.

* அவரது கர்ணன், வசந்த மாளிகை, பாசமலர் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி கண்டது. இன்னும் சில படங்கள் விரைவில் வர இருக்கிறது.

* ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடுவது காலத்தின் கோலம்.

* இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அதற்கு இடமும் இல்லை படிப்பதற்கு உங்களுக்கு நேரமும் இல்லை.

* கன்னடத்தில் ராஜ்குமார் கொண்டாடப்படுவதைப்போல, ஆந்திராவில் என்.டி.ராமராவை கொண்டாடுவதைப்போல மலையாளத்தில் பிரேம் நசீரை கொண்டாடுவதைப்போல் சிவாஜியை தமிழ்நாடு அரசும், தமிழக ரசிகர்களும் கொண்டாடும் நாளே அவருக்கு உண்மையான பிறந்த நாள்.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

vijayakanth / cbe - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
02 அக், 2013 - 14:43 Report Abuse
vijayakanth / cbe happy b'day to our legend......
Rate this:
Nagaraj - Doha,கத்தார்
01 அக், 2013 - 19:54 Report Abuse
Nagaraj என் நடிகர் திலகத்திற்கு என் பணிவான வணக்கங்கள்.
Rate this:
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
01 அக், 2013 - 19:17 Report Abuse
Venkatesh R Venkatesh ஒருவேளை சிவாஜி வேற ஸ்டேட் ஆளா இருந்தா கொண்டாடுவாங்கன்னு நினைக்கிறேன் .இவங்க என்னா கொண்டாடுறது சிங்கம் சிங்கம்தான்
Rate this:
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
01 அக், 2013 - 19:06 Report Abuse
p.boopathy enkira Boopathiyar முடிவாக திரு.சிவாஜி கணேசன் தமக்கு கிடைத்த தொழில் வாய்ப்பு சிவனாக..,முருகனாக..,கிருஷ்ணாக..,காட்சியாக நடித்து பயன் பெற்றார்.., மேலும் அதுபோல் சரித்திர புருசர்கள் மற்றும் விடுதலை போராட்ட வீரர்களாக நடித்து பயன் பெற்றார்.., இதனால் பக்தியும் வளரவில்லை..,சரித்திர புருஷர் வீர சிவாஜி அன்னை ஊட்டிய வீரமும் ஏற்படவில்லை..,விடுதலை வீரர்கள் நாட்டு பற்றும் ஏற்படுத்த வில்லை..,மனிதன் சினிமா படம் பார்த்தல் கடவுள் பக்தி குறையும்..,வீரம் ஏற்படாது..,சோம்பல் ஏற்படும் உண்மை பாரதியின் வ.உசி..,வஞ்சி நாதன் தியாகம் மறக்க செய்து விட்டன..,திரை நிழல் உண்மையை மறக்க செய்யும் ஒரு நிழல் திரை கருவி செய்யும் சினிமா விளைவாகும்
Rate this:
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
01 அக், 2013 - 17:46 Report Abuse
p.boopathy enkira Boopathiyar சினிமா ஒரு வேடம்..,மேகப் மாறினால் காட்சியும் மாறிவிடும் மனிதனும் மாறிவிடுவான். அப்படி பட்ட ஒரு நிழல்கலை ஒரு சினிமா நடிகன் தான் நாட்டு மக்களுக்கு கடவுளையும்..,சரித்திர புருஷர்களும்..,விடுதலை போரட்ட வீரர்களையும் மனித நினைவுக்கு கொண்டு வந்தார் என்று பத்திரிகைகள் தான் சினிமாவின் பெருமைகளாக பேசுவதால் இன்னும் மனிதன் ஏமாந்து கொண்டு இருக்கிறான். நிஜ மனிதனின் வாழ்கையில் திரைநிழல் வெளிச்சம் அறிவை குருடாக்கின்றன..,பத்திரிக்கைகள் அவன் முன்னேற பாதையில் முள்கள் விதைகின்றன..,அதனால் தான் நிஜ மனிதன் வாழ்வில் தடை ஏற்படுகின்றன. உண்மையான வளர்ச்சி தன் வாழ்வில் அடைய முடியவில்லை ..,தினமலர் மக்கள் சமுதாய வாழ ஒழுக்க பத்திரிகையாக இருக்கவேண்டும்..,தடை முள்ளாக வளர கூடாது - பூபதியார்
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in