Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடலை காட்டி நடித்து வளர விரும்பவில்லை - நித்யா மேனன்!!

23 செப், 2013 - 04:01 IST
எழுத்தின் அளவு:

  180, வெப்பம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். கேரளத்து வரவான இவர் தற்போது ஜே.கே. எனும் நண்பனின் காதலி எனும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர இன்னும் சில தமிழ் படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் அளித்த பேட்டி இதோ...

* எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க ஆசை?


இதுவரை மென்மையான கேரக்டர்களில் தான் நடித்து வந்தேன். தற்போது, நடித்து வரும், தமிழ் படத்தில், ஆக் ஷன் அவதாரம் எடுத்துள்ளேன்.  இனி, எந்த மாதிரி வேடத்துக்கும் பொருத்தமான நடிகையாக இருக்க வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.

* ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறதே?

உண்மை தான். டைரக்டர்கள் சொல்லும் முழுக்கதையையும் கேட்டு, அதில், எனக்குரிய வேடத்தின் முக்கியத்துவத்தை மட்டுமே கேட்பேன். மற்றபடி, ஹீரோ யார்? அவருக்கு எந்த மாதிரி ரோல் என்று நான் ஆராய்வதில்லை. அது, எனக்கு தேவையில்லாத விஷயம்.

* முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் போது தானே, உங்களது சம்பளம் உயரும்?

சம்பளத்தை விட, நான் நடிக்கிற கதையும், அதில், நான் நடிக்கிற கேரக்டரும் தான் முக்கியம். அது, திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், சம்பள விஷயத்தில், நான் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

* வாங்குற சம்பளத்தை விட, அதிகமாக நடிக்கிறீர்களாமே?

இயக்குனர்கள், 50 சதவீதம் என்றால், நடிப்பவர்களும், 50 சதவீதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால், டைரக்டர்கள்  சொல்வதை கேட்டு, அப்படியே நடிக்காமல், அந்த காட்சியில், இன்னும் எந்த அளவுக்கு நன்றாக நடிக்கலாம் என்று, நானும் யோசித்து நடிப்பேன்.  இதனால், பல டைரக்டர்களிடம் பாராட்டு பெற்றிருக்கிறேன்.

* தெலுங்கில் நடிகைகளை கவர்ச்சி பொம்மைகளாக சித்தரிப்பார்களே? நீங்கள் எப்படி?

தெலுங்கிலும், தமிழ், மலையாளத்தில் நடிப்பது போன்று, கிளாமர் இல்லாத வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன். உடலை காட்டி நடித்து வளர்வதை விட, நடிப்பைக் காட்டி வளருவதையே நான் விரும்புகிறேன்.

* நிஜத்தில் நித்யா எந்த மாதிரி பெண்?

ரொம்ப அடக்கமான, அமைதியான பெண். வெற்றியை கண்டு ஆடவும் மாட்டேன். தோல்வியை கண்டு சோர்ந்து போகவும் மாட்டேன். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருப்பேன்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Raja Seb - Chennai,இந்தியா
24 செப், 2013 - 22:26 Report Abuse
Raja Seb nithya nee kalakku kannu...
Rate this:
LAX - Trichy,இந்தியா
24 செப், 2013 - 11:38 Report Abuse
LAX இந்த டயலாக் வழக்கமான புளிச்சமாவு போல ஆகாமல் இருந்தால் சரி..
Rate this:
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
24 செப், 2013 - 07:10 Report Abuse
Prabhakaran Shenoy ஒரு வேளை இதுதான் நித்யாவுக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள வித்தியாசமோ?
Rate this:
Sirajudeen...M - Mugavai...T.N.....,இந்தியா
22 அக், 2013 - 14:41Report Abuse
Sirajudeen...Mஇப்படி சொன்னவங்க எத்தனை கோடிப் பேரோ?????? ...........
Rate this:
Chandra Sekaran - manama,பஹ்ரைன்
23 செப், 2013 - 21:57 Report Abuse
Chandra Sekaran போக போகத்தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
Rate this:
Sirajudeen...M - Mugavai...T.N.....,இந்தியா
22 அக், 2013 - 14:42Report Abuse
Sirajudeen...Mஉண்மைதான்..............
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
23 செப், 2013 - 19:56 Report Abuse
Angry ஜெய் பெருத்த ஏமாற்றம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in