இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் அன்பே சிவம். கமல், மாதவன், கிரண், நாசர், சந்தானபாரதி நடித்திருந்தார்கள். சுந்தர்.சி டைரக்ட் செய்திருந்தார், வித்யாசாகர் மியூசிக் போட்டிருந்தார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ரிலீஸ் செய்திருந்தது.
அன்பு ஒன்றுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி எடுக்கப்பட்டிருந்தது. சமூக போராளியாக வாழும் ஒருவன் அன்பால் வாழும் ஒரு அற்புத வாழ்க்கையை சொன்னது. கமல் நடித்ததில் அவருக்கு பிடித்த 5 படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரசிப்பு தரம் படத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கதை சொன்ன விதம் ரசிகனுக்கு பிடிக்கவில்லை படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். பத்து வருடங்களுக்கு பிறகு வந்திருக்க வேண்டிய படம் என்று அப்போது மீடியாக்களால் விமர்சிக்கப்பட்டது.
அது இப்போது சரியாகி இருக்கிறது. இப்போதுள்ள இளைஞர்கள் அன்பே சிவம் படத்தை சிலாகித்து ரசிக்கிறார்கள். தொலைக்காட்சியில் அந்த படம் ஒளிபரப்பானால் பாராட்டி அந்த நிறுவனத்துக் ஏகப்பட்ட கடிதங்கள் வருகிறதாம். மறுபடியும் எப்போது ஒளிபரப்புவீர்கள் என்ற கேட்கிறார்களாம்.
படத் தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கும் படத்தை ரீ- ரிலீஸ் பண்ணச் சொல்லி கடிதமும், தொலைபேசிகளும் வருகிறதாம். இதனால் படத்தை ரி ரீலீஸ் பண்ணும் முயற்சியில் தயாரிப்பாளர் கே.முரளிதரன் ஈடுபட்டிருக்கிறார். "உயர்ந்த தரமான படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமலின், ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் மறு ரிலீசுக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ‘அன்பே சிவம்’ படத்தை டிஜிட்டல்படுத்தி ஆடியோ தரம் உயர்த்தி மறுபடியும் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். கமலின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" என்கிறார் முரளிதரன்.