ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துபாயை சேர்ந்த பல் டாக்டர் ஜெஸ்லியை திருமணம் செய்து கொண்டார் பரத். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பதிவுத்திருமணமாக நடந்த இவர்களது திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் பரத். பிறகு காதல் படத்தின் மூலம் பேசப்படும் நடிகரான அவர் தொடர்ந்து எம்டன் மகன் (எம் மகன்), பழனி, நேபாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் 555. இப்படத்தில் சிக்ஸ்பேக் உடம்பெல்லாம் காட்டி ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து இருந்தார்.
பரத்துக்கும் துபாயை சேர்ந்த பல் டாக்டர் ஜெஸ்லி என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். பரத், இந்து பிராமண வகுப்பை சேர்ந்தவர். ஜெஸ்லி, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல்–கலப்பு திருமணத்தை இருவருமே பதிவு செய்து கொள்ள விரும்பினார்கள். அதன்படி, பரத்–ஜெஸ்லி பதிவு திருமணம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
செப்., 14ம் தேதி திருமண வரவேற்பு
திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு செப்.,14ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கிறது. இதில் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.