ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் ரஜினி, கமல், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூனா, மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், உபேந்திரா, இந்தியில் சல்மான் என சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி அசத்தியவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கடந்த 27 வருடங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனியார் டி.வி. ஒன்றில் மஹாபாரதம் என்ற வரலாற்று சீரியலை பிரமாண்டமாக இயக்கி வரும் சுரேஷ் கிருஷ்ணா இப்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய பட நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, தனது முதல்பட தயாரிப்பை தானே தயாரித்து, இயக்குகிறார். இப்படத்தின் நாயகனாக பிரின்ஸ் என்பவரும், நாயகியாக 2012ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற வானியா மிஷ்ராவும் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. காதல், ஆக்ஷ்ன், நகைச்சுவை கலந்த படமாக இப்படத்தை உருவாக்குகிறார் சுரேஷ் கிருஷ்ணா.