இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் |
தற்போது ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படப்பிடிப்பில் இருக்கிறார் அஜீத். இந்த நிலையில், ஆரம்பம் படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருவதோடு, படத்தை தீபாவளிக்கு வெளியிடயிருப்பதாக நேற்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அஜீத் நடித்து வரும் இன்னொரு படமான வீரம் படமும் பொங்கலுக்கு வெளியாவது அஜீத்தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டது.
இதனால் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகவிருந்த சில படங்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும் ஒன்று. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடும் முடிவில் இருந்தனர். ஆனால், இப்போது அஜீத்தின் வீரம் படம் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாவது தியேட்டர் பிரச்னை உருவாக்கும் என்று ஜில்லா படத்தை பொங்கலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஆக, அஜீத்தின் வீரம் படத்தினால் விஜய்யின் ஜில்லா பின்வாங்கியிருக்கிறது.