Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ், கே.வி.ஆனந்த் இணையும் அனேகன்

01 செப், 2013 - 14:43 IST
எழுத்தின் அளவு:

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக கே.வி.ஆனந்த் டைரக்ட் செய்த மாற்றான், அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை, என்றாலும் மீண்டும் அதே நிறுவனத்திற்கு படம் இயக்குகிறார் கே.வி.ஆனந்த். வழக்கம்போல அவரது டீமில் இருக்கும் எழுத்தளார் சுபாவுடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார். படத்திற்கு அனேகன் என்று பெயர் வைத்துள்ளார்.

முதலில் சூர்யா நடிப்பார் என்றார்கள். பிறகு விஜய் என்றார்கள். இறுதியில் தனுஷ் நடிப்பதாக முடிவாகி இருக்கிறது. அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த அமிரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்ஜி, ஆகியோர் வில்லன்கள். ஜெகன் காமெடியன். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ராவணன் படத்திற்கு பிறகு கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். செப்டம்பர் 2ந் தேதி பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

"நமச்சிவாய வாழ்க..." என்ற திருவாசக பாடலின் இறுதியில் வரும் "ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க..." என்ற வரியில் உள்ள அனேகன் என்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பு. அனேகன் என்றால் ஒன்றானவன், உருவில் பலரானவன் என்று பொருள். அயன் போன்று காமெடி கலந்த ஆக்ஷன் படம். தனுஷிற்கு இது முக்கியமான ஆக்ஷன் படமாக இருக்கும். வியட்நாம், கம்போடியா, மலேசியா, பொலீவியா போன்ற நாடுகளிலும் அனேகன் படமாக இருக்கிறது" என்கிறார் கே.வி.ஆனந்த்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

eric - goa  ( Posted via: Dinamalar Android App )
02 செப், 2013 - 00:40 Report Abuse
eric அனேகமா இந்த படமும் Failiureதான் நினைக்கின்றேன்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
02 செப், 2013 - 17:55Report Abuse
சு கனகராஜ் அநேகன் படத்தில் சினேகனுக்கு வாய்ப்பு உண்டா ?...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
01 செப், 2013 - 21:11 Report Abuse
சு கனகராஜ் ஏதோ ஒரே அடியில 60 பேரை விழ வச்சி எல்லாரையும் படுக்க வச்சிடாத தம்பி
Rate this:
John Kingrider - Manama,பஹ்ரைன்
01 செப், 2013 - 19:58 Report Abuse
John Kingrider ஆஷிஸ் வித்யார்த்திய என் நடிக்க வைக்கிறார் இந்த கே வி ஆனந்த். அந்த ஆள் முல்லை பெரியார் விசயத்தில் கேரளாவுக்கு ஆதரவாக எடுத்த டேம் படத்தில் நடித்து காணாமல் போனவராச்சே. பார்த்து நல்ல ஒரு வில்லனை போடலன்னா இந்த படம் ஊத்திக்கும்.
Rate this:
appu - madurai,இந்தியா
01 செப், 2013 - 16:20 Report Abuse
appu மாற்றான் போல இல்லாம இந்தப் படமாவது கே வி ஆனந்துக்கு வெற்றிப் படமாக அமையட்டும்..வாழ்த்துக்கள்...தனுஷ் செலக்ஷன் சரியாக இருக்கும் என்று நம்புவோம்...பட்டய கிளப்புங்க தனுஷ்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in