ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு, இந்தி என, எந்த மொழி திரைப்படங்களிலும், லட்சுமி ராய்க்கு வாய்ப்பு இல்லை. அப்படியே, முட்டி மோதினாலும், குத்துப்பாடலுக்கு ஆட்டம் போடுவதற்கான வாய்ப்பு தான் கிடைக்கிறதாம். இதனால், விரக்தியிலிருந்த லட்சுமிக்கு, இப்போது, அவரின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலான செமத்தியான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தில், பைக் ரேஸ் வீராங்கனையாக நடிக்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கல்லூரி காலங்களில் பைக் ஓட்டுவதில், எனக்கு ஆர்வம் அதிகம். விதம் விதமான பைக்குகளை ஓட்டி இருக்கிறேன். நடிக்க வந்தபின், பைக் ஓட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஒரு ஏக்கம் இருந்தது. இந்த படத்தின் மூலம், அந்த ஏக்கம் போய்விட்டது. படம் வந்ததும் பாருங்கள். எப்படி பைக் ஓட்டி அசத்துகிறேன் என்று" என, கூறியுள்ளார்.
ஒரு போனஸ் தகவலும் உண்டு. இந்த படத்தில் ப்ரியா ஆனந்தும் இருப்பதால், அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பது யார் என, தெரியவில்லையாம்.