ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மக்கள் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு கொட்டித் தீர்த்து விடு தோழி என்று பெயரிட்டுள்ளனர். மனிதர்களில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது இயல்பு தான். என்றாலும் அவைகளிலிருந்து எத்தனை பேர் வெளியே வந்துள்ளனர் என்றால் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது எனலாம். காரணம், எதையும் பகிர்ந்து கொள்ள இயலாத நிலை, கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய முடியாத நிலை என சூழ்நிலைக் கைதியாக அடைப்பட்டுக் கிடக்கின்றான் மனிதன்.
ஏராளமான மனநோய்களால் ஆட்கொள்ளப்படுகின்றனர். அலுவலகத்தில் பிரச்னை, வீட்டில் சண்டை, சச்சரவு, நண்பர்களுடன் இயல்பாக பேச இயலாமை என எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு உற்ற தோழியாய் இருந்து, தகுந்த ஆலோசனைகளை உரிய உளவியல் வல்லுனர் மூலமாக கொட்டித் தீர்த்துவிடு தோழி என்று நிகழ்ச்சியின் வாயிலாக தருகிறது, மக்கள் தொலைக்காட்சி. வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெண்களுக்குரிய பிரச்னைகள் குறித்து மருத்துவர் ஷாலினி ஆலோசனைகளை வழங்குகிறார். தொகுப்பாளினி ப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.