பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |
நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் படம்தான் படித்துறை. நடிப்பு, பட விநியோகம் என்று இரு துறைகளில் கால் பதித்து வெற்றி கண்ட ஆர்யா படித்துறை மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். தான் தயாரிக்கும் புதிய படத்தில் கண்டிப்பாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று ஏற்கனவே சொன்னது போலவே தனது படத்தில் புதுமுகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் ஆர்யா.
படித்துறை பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ் வருமாறு:
* படித்துறை படத்தை டைரக்டர் பாலுமகேந்திராவின் சீடர் சுகா இயக்குகிறார்.
* டைரக்டர் சுகா, சுரேஷ் கண்ணன் என்ற தனது பெயரை சுகா என்று சுருக்கியிருக்கிறார்.
* படத்தின் கதாநாயகனாக அபிஷேக், கதாநாயகியாக சாந்தினி ஆகியோர் நடிக்க, இயக்குனர் அழகம் பெருமாள் முக்கிய வேடமேற்று நடிக்கிறார்.
* இந்தப் படத்தில் இதுவரை கேமராவே பார்க்காத 30 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இதில் 40 வருடங்களாக சினிமாவே பார்க்காத 80 வயது மூதாட்டியும் ஒருவர்.
* நெல்லை மக்களின் மொழியும், கலாச்சாரமும் முதல்முறையாக மிக இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
* இசைஞானி இளையராஜா இசையில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் முதல் முறையாக பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.
* கவிஞர்கள் முத்துலிங்கம், பழனிபாரதி, முத்துக்குமார் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
* படத்தின் ஹைலைட்டாக இளையராஜாவின் இசை இருக்கும் என்று இப்போதே பெருமிதத்துடன் சொல்கிறது படித்துறை யூனிட்.
* சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் பேலா ஷிண்டே, கார்த்திக், பவதாரணி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.
* இதுவரை கேமராவில் சிக்காத திருநெல்வேலியை சுற்றியுள்ள பல பகுதிகள் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
* பலமுறை தேசியவிருது பெற்ற பி.கிருஷ்ணமூர்த்தி, படித்துறை படத்தின் கலை இயக்குனராகப் பணியாற்றுகிறார். படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸும், நிர்வாகத்தயாரிப்பை சுந்தர்ராஜும் கவனிக்கிறார்கள்.
- தினமலர் சினி டீம் -