தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் தனது குடும்பத்தாரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்த நடன பெண் துணை இயக்குனர், திடீரென மனுவை வாபஸ் பெற்றார்.
சென்னை அசோக் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த பார்த்திபன் மகள் செல்வராணி (31), விழுப்புரம் எஸ்.பி., மனோகரனிடம் நேற்று அளித்த மனு : சினிமா நடன துணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். சினிமா நடிகர் ராகவா லாரன்ஸ்க்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்வதாகக் கூறி, 12 ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்தினார். நானும், அவரது முதல் மனைவி லதாவும் ஒரே வீட்டில் வசித்தோம். பின், என்னை திருமணம் செய்ய மறுத்ததோடு, குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் மறுத்தார். இதனால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. எனது குடும்பத்தினர் வற்புறுத்தியும் என்னை திருமணம் செய்ய மறுத்தார். அதனால், விழுப்புரம் வந்து விட்டேன். எனது குடும்பத்தார் மூலமும், ராகவா லாரன்ஸ் மூலமும் எனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் செல்வராணி கூறியிருந்தார்.
திடீர் வாபஸ் : விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பகல் 12: 00 மணிக்கு புகார் அளித்த செல்வராணி, மாலை 5:00 மணிக்கு மனுவை திடீரென வாபஸ் பெற்றார். அடுத்த அரை மணி நேரத்தில், செல்வராணியை தேடி, அவரது அக்கா விஜயராணி அங்கு வந்தார். இவர், செல்வராணியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு எஸ்.பி., யிடம் மனு கொடுத்தார். இது குறித்து டவுன் டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். மாலை 5:00 மணிக்கு தனது குடும்பத்தினருடன் செல்வதாக செல்வராணி கூறியதன் பேரில், அனுப்பி வைக்கப்பட்டார். பாதுகாப்பு கேட்டு கொடுத்த புகார் மனுவை செல்வராணி வாபஸ் பெற்றார். இச்சம்பவத்தின்போது, செல்வராணியுடன் வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பாலமுருகன், விசாரணைக்குப் பின், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.