35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் |
தனது ஒவ்வொரு படங்களிலும் தனக்கு ஜோடியாக முன்னணி நடிகைதான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி. அந்த வகையில், ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுடன் நடித்தவர், இப்போது இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கப்போகும் படம் நண்பேன்டா. இந்த படத்திலும் முன்னணி நடிகைதான் தனக்கு ஜோடியாக வேண்டும் என்று பரிசீலித்து வந்தவர் இப்போது காஜல்அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் எந்த படமும் இல்லாத காஜல், தமிழில் ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால், அடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். அந்த நேரத்தில் உதயநிதி படத்தில் நடிக்க கேட்டதும் சற்று யோசித்தவர், பின்னர் ஹன்சிகா, நயன்தாராவெல்லாம் நடிக்கும்போது நடித்தாலென்ன என்று ஓ.கே சொல்லி விட்டாராம்.
மேலும், உதயநிதி படம் என்றால் அதில் சந்தானம் இல்லாமலா? இந்த படத்திலும் நண்பேன்டா அவர்தானாம். வழக்கம்போல், காதல் கலந்த காமெடி படம் என்பதால், உதயநிதி-சந்தானம் இருவரும் முந்தைய படங்களை விட இப்படத்தில் செம காமெடி கலாட்டாவில் இறங்கப்போகிறார்களாம்.