Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீ-மேக் படங்களில் இனி நடிக்க மாட்டேன்: ஜெயம் ரவி

31 ஜூலை, 2013 - 04:11 IST
எழுத்தின் அளவு:

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் எடிட்டர் ‌மோகனின் மகன் ரவி. முதல்படமே அவருக்கு ஜெயம் தேடி வர, அப்போதிலிருந்து ஜெயம் ரவி ஆனார். தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியன், பேராண்மை, தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது நிமிர்ந்து நில், பூலோகம் படங்களில் நடித்து வருகிறார். அதில் பூலோகம் படத்தில் பாக்ஸராக நடித்து வரும் ரவி, ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் உடனும் மோதுகிறார். இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி...

* இப்போது நடிக்கும், "பூலோகம் படம் குறித்து?

வட சென்னை தான், இந்த படத்தின் கதைக் களம். யாரும் தொடாத ஒரு கதை. வட சென்னையில் வசிக்கும், இரண்டு பாக்சிங் பரம்பரை பற்றிய கதை. இதில், தேசிய அளவிலான ஒரு பிரச்னை பற்றியும் கூறியுள்ளோம். இதில், நடித்தது புது அனுபவத்தை தந்தது. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும், புதுவித அனுபவமாக இருக்கும்.

* வெற்றி, தோல்வியை எப்படி எடுத்துக்குவீங்க?

வெற்றி, தோல்வி என்பது, ஒரு "கிராப் மாதிரி. ஏறி, இறங்கி போயிட்டு இருக்கும். என்னைப் பொறுத்த வரை, எல்லா படத்துக்கும் ஒரே மாதிரி தான் உழைக்கிறேன். எல்லா படமும், நல்லா வரும் என்று நம்பித் தான், வேலை செய்கிறோம். ஆனால், படம் பார்க்கும்போது தான், வெற்றி எது, தோல்வி எது என்று தெரிகிறது.  படத்தின், வெற்றி, தோல்வி படம் பார்க்கும் ரசிகர்கள் கைகளில் தான் உள்ளது.

* எப்படிப்பட்ட கேரக்டர்களை தேர்வு செய்கிறீர்கள்?

நான் கதை கேட்கும்போது, ஒரு ரசிகரின் மனநிலை எப்படி இருக்குமோ, அப்படிப்பட்ட மனநிலையில் தான் கேட்பேன்.கேட்கும் போதே, கதை பிடிக்க வேண்டும். இதை, ரசிகர்கள், ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா என்ற சந்தேகமே வரக் கூடாது. அப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படங்களில் தான் நடிக்கிறேன்.



* உங்களுக்கென்று, ஒரு இமேஜ் உள்ளதே?

இந்த இமேஜ், நானாக ஏற்படுத்தி கொண்டதல்ல. மக்களாக கொடுத்தது. நான் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு ரசிகர்கள், ஆதரவு தருகின்றனர்.  இமேஜை தக்க வைப்பது ரொம்ப சிரமம். ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது தான், என் விருப்பம்.

* "ரீ-மேக் படங்களில் அதிகமாக நடிக்கிறீர்களே. உங்களுக்கே போரடிக்கவில்லையா?

திரையுலகிற்கு அறிமுகமான புதிதில், "ரீ-மேக் படங்களில் நடித்தேன். இப்போது அப்படியில்லை. நேரடி படங்களில் தான் அதிகமாக நடிக்கிறேன்.  "பூலோகம், நிமிர்ந்து நில் ஆகியவை நேரடி படங்கள் தான். இதையடுத்து, நானும், என் அண்ணனும் சேர்ந்து ஒரு படம் செய்யப் போறோம். எனவே, "ரீ-மேக் நாயகன் என்ற பெயர், இனி மாறும்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
31 ஜூலை, 2013 - 15:25 Report Abuse
Angry ஜெய் மொத்தமா இனி நடிக்க மாட்டேன் என சொல்லு அப்பதான் நாங்க மகிழ்வோம்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 17:32Report Abuse
சு கனகராஜ் நல்ல நடிகர் அப்படி சொல்லவேண்டிய அவசியமே இல்லை...
Rate this:
appu - madurai,இந்தியா
31 ஜூலை, 2013 - 15:09 Report Abuse
appu இவரு என்னமோ வருசத்துக்கு நாலஞ்சி படம் நடிச்சு அதுல ஒன்னு ரெண்டு ரீமேக் பெயில் ஆனா மாறி ஸீன் போடறார்?இவருக்கு கல்யாணம் முடிஞ்சதுல இருந்து என்னவோ ஏழற உட்டு ஆட்டிகினு இருக்குது...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 17:33Report Abuse
சு கனகராஜ் கல்யாணம் ஆனாலே எல்லாருக்கும் கொஞ்சநாள் ஏழரை பிடிச்சி ஆட்டத்தான் செய்யும் கார்த்தி, ரவி விலக்கல்ல...
Rate this:
THARUTHALA ajith - chennai,இந்தியா
31 ஜூலை, 2013 - 14:32 Report Abuse
THARUTHALA ajith ஆல் தி பெஸ்ட்..
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
31 ஜூலை, 2013 - 13:04 Report Abuse
kumaresan.m " படத்தில் சண்டை போட்டாலும் குழந்தை சண்டை போன்றே தெரிகிறதே "
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
31 ஜூலை, 2013 - 12:09 Report Abuse
SaS இங்கேரு... தமிழ் சினிமாக்கு நீ எதாச்சும் நல்லது பண்ண நெனச்சன்னா... தயவு செய்து சினிமாவ விட்டே ஓடிடு பில்லு..!
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in