Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாசமலர் விழாவில் சிவாஜி குடும்பம் கண்ணீர்...!!

30 ஜூலை, 2013 - 10:59 IST
எழுத்தின் அளவு:

 நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி, காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த படம் பாசமலர். சென்டிமெண்ட் படங்களின் தாய் படமான இது, அந்தக் காலத்திய வெள்ளி விழா படம். அண்ணன்-தங்கை பாசத்துக்கு இப்போதும் உதாரணமாக இருக்கும் படம். கர்ணன், வசந்தமாளிகை வரிசையில் பாசமலரையும் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி டிஜிட்டல் ஆக்கியிருப்பதோடு சினிமாஸ்கோப்பாகவும் மாற்றி இருக்கிறார்கள். அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் பூமிநாதன் இந்த பணியைச் செய்துள்ளார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ரிலீசாகிறது.

இதன் டிரைய்லர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், மகள் தேன்மொழி ஆகியோர் வெளியிட ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ், சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் டிரைய்லர் வெளியிடப்பட்டது. அகன்ற திரையில் பாசமலரைப் பார்த்த சிவாஜி குடும்பத்தினர் கண்களில் கண்ணீர் கொட்டியது.

பிறகு பிரபு பேசியதாவது: அப்பாவின் உயர்மூச்சு ரசிகர்கள்தான். அவரையும் வாழ வைத்தீர்கள், எங்களையும் வாழ வைத்தீர்கள். இப்போது என் மகனையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்பாவின் ரசிகர்கள் இருக்கும்வரை எங்கள் குடும்பத்திற்கு எந்த கவலையும் இல்லை. உங்களை எங்கள் குடும்பம் உயிர் உள்ளவரை மறக்காது. அப்பாவுக்கு கேமராவுக்கு முன்னால்தான் நடிக்கத் தெரியும், கேமராவுக்கு பின்னால் நடிக்கத் தெரியாது. எங்களையும் அப்படித்தான் வளர்த்திருக்கிறார். இவ்வாறு பிரபு உணர்ச்சி பொங்க பேசினார்.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

31 ஜூலை, 2013 - 13:31 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) கண்ணீர் ,,இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ....சிரிபவரை பார்த்தால் சிரிப்பு வரும் ...வீரமா பேசுபவரை பார்த்தால் வீரம் வரும் ...அழுபவரை பார்த்தால் அழுகை தான் வரும்....நவரசங்களில் "அழுகை" தான் சிவாஜிக்கு நன்றாக வரும்.....சிரிப்பு மருந்துக்கு கூட வராது....இவரது அழுகை பார்த்து ரசிகர்கள் தானும் அழுது உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை ஓவரா புகழ்வார்கள் ...அதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள கூடாது ...
Rate this:
கரிகாலன் - சிங்கப்பூர்  ( Posted via: Dinamalar Android App )
31 ஜூலை, 2013 - 06:09 Report Abuse
கரிகாலன் அப்பாவின் பெருமூச்சு ரசிகர்கள் என்று சொல்லும் பிரபு, எவ்வளவோ பணம் சம்பாதி்த்தும் மக்களுக்காக எதையும் செய்யவில்லையே சிவாஜி! ரஜினியிம் இதைப்போலத்தான்!
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 18:16Report Abuse
சு கனகராஜ் அவர் வீட்டு வேலைக்காரர் திருமணத்துக்கு உதவி கேட்ட போது பிரபு கொடுத்ததை சிவாஜி திரும்ப வாங்கி கொண்டாராம் அவங்கப்பா சம்பாதிச்சி வச்சிருக்கார் எங்கப்பா எனக்கு எதுவும் சம்பாதிச்சி வக்கலையே என்று நடிப்பு பிழம்பை அவிழ்த்து விட்டாராம் வேலைகாரர் உள்ளதும் போச்சே நோள்ளகன்னா என்று நொந்து போனாராம்...
Rate this:
Sengkathir Sooriyar - Jaffna,இலங்கை
31 ஜூலை, 2013 - 03:05 Report Abuse
Sengkathir Sooriyar இன உணர்வு கலைஞர்களுக்கு வேண்டும். பெரிதாக ரசிகர்கள் என்று போட்டுத்தாக்கும் பிரபு ஈழத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்களே ஒரு அனுதாப செய்தி வெளியிட்டதுண்டா???? எல்லாம் பணம் காசுக்காக அன்பு பாசம் என்று பிதட்டும் பித்தலாட்டமே. உங்கப்பன் நல்ல நடிகன் மட்டுமே. இனமான உணர்வில்லா ஆட்கள் நீங்கள். உமக்கு தமிழே எழுத தெரியாது வாசிக்க தெரியாது என்று அறிந்தோம். பிறகு ....
Rate this:
rajaraja chozhan - madurai,இந்தியா
30 ஜூலை, 2013 - 22:35 Report Abuse
rajaraja chozhan பூபதி, கலையை மிக கொச்சைபடுத்தி பேசுவது தவறு. cinema இல்லையென்றால் மக்கள் மாக்களே. துரியோதன் சேலையை இழுத்தான் அதனால் அதை பார்த்து சேலையை மக்கள் இழுக்கிறார்களா. சிவாஜியின் அனைத்து படங்களும் ஒரு காவியம்.
Rate this:
Rathinasami Kittapa - Ambur,இந்தியா
30 ஜூலை, 2013 - 22:10 Report Abuse
Rathinasami Kittapa இம்மாதிரியான படங்கள் உண்மையில் மனிதனை மனிதனாகவே மாற்றியவை. தற்போது வரும் படங்கள் மக்களை மாக்களாக்குகின்றன.பொதுவான கருத்தென்றால் சினிமா ஒரு பொழுதுபோக்கு தான். ஆனாலும் நம் மக்களின் மனநிலை அப்படியில்லை. அப்படத்தோடும் அதன் கருத்தோடும் ஒன்றி விடுகின்றனர். அவர்களது வாழ்க்கையிலும் அது பிரதிபலிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்ததே சினிமாவால்தான் என்றால் மிகை அல்ல.எனவே சினிமாத் துறையினர் மக்கள் மனத்தைக் கெடுக்கா வண்ணம் படம் எடுக்க வேண்டும். ..
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in