நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.
60வது தென்னிந்திய திரைப்பட விருதுகளின் முழு விபரம்...
சிறந்த படம்
தமிழ் - வழக்கு எண் 18/9
தெலுங்கு - ஈகா
மலையாளம் - ஆயளும் நஞ்சனம் தம்மீழ்
கன்னடம் - கிராந்திவீரா சங்கோலி ரயாணா
சிறந்த நடிகர்
தமிழ் - தனுஷ் (3)
தெலுங்கு - பவன் கல்யாண் (கபார் சிங்)
மலையாளம் - பகத் பாசில் (22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - தர்ஷன் (கிராந்திவீரா சங்கோலி ரயாணா)
சிறந்த நடிகை
தமிழ் - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சமந்தா (ஈகா)
மலையாளம் - ரீமா கல்லிங்கல் ((22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - பிரியாமணி (சாருலதா)
சிறந்த டைரக்டர்
தமிழ் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
தெலுங்கு - ராஜமெளலி (ஈகா)
மலையாளம் - லால் ஜோஸ் (ஆயளும் நஞ்சனம் தம்மீழ்)
கன்னடம் - விஜயஒரசாத் (சித்திலிங்கு)
சிறந்த துணை நடிகர்
தமிழ் - தம்பிராமையா (கும்கி)
தெலுங்கு - சுதீப் (ஈகா)
மலையாளம் - பிஜூ மேனன் (ஆர்டினரி)
கன்னடம் - அதுல் குல்கர்னி (எதிகாரிகி)
சிறந்த துணை நடிகை
தமிழ் - சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
தெலுங்கு - அமலா அக்கினி (லைப் இஸ் ப்யூட்டிபுல்)
மலையாளம் - கவுதம் நாயர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - சுமன் ரங்கநாதன் (சித்திலிங்கு)
சிறந்த இசை
தமிழ் - டி.இமான் (கும்கி)
தெலுங்கு - தேவிஸ்ரீ பிரசாத் (கபார் சிங்)
மலையாளம் - வித்யாசாகர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - வி.ஹரிகிருஷ்ணா (டிராமா)
சிறந்த பின்னணி பாடகர்
தமிழ் - தனுஷ் (3, கொலவெறிடி...)
தெலுங்கு - வேதபள்ளி ஸ்ரீனிவாஸ் (கபார் சிங்)
மலையாளம் - விஜய் யேசுதாஸ் (ஸ்பிரிட்)
கன்னடம் - அவிநாஸ் செப்ரி (சித்திலிங்கு)
சிறந்த பின்னணி பாடகி
தமிழ் - என்.எஸ்.கே.ரம்யா (சற்று முன்பு பார்த்து... நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சுஜித்ரா (பிஸினஸ்மேன்)
மலையாளம் - ஸ்வேதா (அரிகி)
கன்னடம் - இந்து நாகராஜ் (கோவிந்தயான்மகி)
சிறந்த புதுமுக விருதுகள்
நடிகர்
உதயநிதி ஸ்டாலின் - (ஒரு கல் ஒரு கண்ணாடி, தமிழ்)
தல்குர் சல்மான் - (செகண்ட் ஷோ, மலையாளம்)
நடிகை
லட்சுமி மேனன் - (சுந்தரபாண்டியன், தமிழ்)
ஸ்வேதா ஸ்ரீவட்சா - (சைபர் யுகதால் நவ யுகா, கன்னடம்)
வாழ்நாள் சாதனையாளர் விருது : வாணி ஜெயராம் மற்றும் பாபு
விழாவில் ஸ்ருதிஹாசன், நாவ்யா நாயர் உள்ளிட்ட பல நடிகைகளின் நடனங்களும் இடம்பெற்றன.