'ஆர்யன்' படத்தில் அமீர்கான் நடிக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் சொன்ன புது தகவல் | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! |
குழந்தைகளையும், தன்னையும் சித்ரவதை செய்வதாக நடிகர் ஆனந்த் பாபுவின் மனைவி விவாகரத்து கோரி, சென்னை, குடும்பநல கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்துள்ளார். விசாரணை, ஆக., 20 க்கு, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு. இவர், "வானமே எல்லை, பாடும் வானம்பாடி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட, பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான, "ஆதவன் படத்தில், நடித்துள்ளார். ஆனந்த் பாபுவுக்கும், சாந்தி என்பவருக்கும், 1985ல், கிறிஸ்தவ முறைப்படி, திருமணம் நடந்தது. இவர்களுக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தன்னையும், தன் குழந்தைகளையும் கவனிக்கவில்லை என்றும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறி, சென்னை, குடும்பநல கோர்ட்டில், சாந்தி விவாகரத்து கோரியுள்ளார்.
அவரது மனுவில் கூறியிருப்பதாவது: திருமணமான பின், மூன்று மாதம் மட்டுமே சந்தோஷமாக இருந்தேன். என்னிடம், அவர் சுமூகமாக இல்லை. அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். படப்பிடிப்புகளுக்கு செல்வதாக நினைத்திருந்தேன். என் மாமனார், எங்களை அன்புடன் பராமரித்து வந்தார். அவருக்கு சுமையாக இருக்க விரும்பாமல், என் குழந்தைகளுடன் தனியாக வசித்தேன். அப்போதும், அவர் எங்களை கவனிக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக, வேலை தேடினேன். ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களை செய்தேன். 8 ஆண்டுகளாக, ஆனந்த் பாபு வீட்டிற்கு வருவதில்லை.
என் சுய சம்பாத்தியத்தில், ஈக்காட்டுத்தாங்கலில் வீடு வாங்கினேன். அவரது தந்தையின் சொத்துகளை விற்றுவிட்டார்; எங்களுக்கு, ஒரு பைசா கூட தரவில்லை. குழந்தைகளுக்காக, அவரை ஏற்றுக்கொண்டேன்; ஆனால், அவர் திருந்தவில்லை. குடித்துவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டுவார். என்னையும், குழந்தைகளையும், சித்ரவதை செய்கிறார். எனவே, அவரிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு, சென்னை, முதன்மை குடும்பநல கோர்ட் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. "நோட்டீஸ் அனுப்பியும், ஆனந்த் பாபு ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் விசாரணை, ஆக., 20 க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.