Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் படத்துக்கு கவுண்டமணி டயலாக் டைட்டீலாகிறது!

13 ஜூலை, 2013 - 17:44 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக கதை பிரச்னையை விட டைட்டீல் பிரச்னைதான் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தின் பூஜை போடும்போதே அதன் டைட்டீலை அறிவித்து விடுவார்கள். ஆனால் இப்போது பல படங்களுக்கு என்ன தலைப்பு என்பதே தெரியவில்லை. குறிப்பாக, தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 53வது படத்துக்கு இப்போது வரை என்ன தலைப்பு என்பது தெரியாத நிலையில்தான் உள்ளது. ரிலீஸ் ஆவதற்குள்ளாவது அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

இந்த நிலையில், எதற்கு புதுசா யோசிச்சு கஷ்டப்பட்டுக்கிட்டு என்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஒரு படத்துக்கு, வின்னர் படத்தில் கைப்புள்ளயாக நடித்த வடிவேலு நடத்திய "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்பதையே டைட்டீலாக்கியுள்ளனர். அதையடுத்து இப்போது, அவரது இன்னொரு படத்துக்கு "கரகாட்டக்காரன்" படத்தில் ஒரு ஓட்டக்காரை தள்ளிக்கொண்டு திரிவார்களே அந்த காரை யாருடையது என்று ஒருவர் கேட்க, அதற்கு கவுண்டமணி.... நடிகை சொப்பன சுந்தரியோட கார் என்பார். அப்போது, செந்தில் அவரது காதுக்குள் சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை நாம வச்சிருக்கோம். இப்ப அந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கான்னு கேட்பாரு. அதற்கு செந்திலை பளார் என ஒரு அறை விட்டபடி, யாரு யார வச்சிருக்கானு தெரிஞ்சிக்கிறதா என் வேலை என்பார்.

அப்படி பிரபலமாக பேசப்பட்ட அந்த "சொப்பன சுந்தரி" என்ற பெயரையே இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும இன்னொரு படத்துக்கும் வைத்திருக்கிறார். ஆக, கவுண்டமணி, வடிவேலு போன்ற காமெடியன் படம் இருக்கிறவரை நம்மூர் ஹீரோக்களின் படங்களுக்கு டைட்டீல் பிரச்னையே இருக்காது என்று சொல்லலாம்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Skv - Bangalore,இந்தியா
18 ஜூலை, 2013 - 05:30 Report Abuse
Skv சினிமாலே கதை பஞ்சம் , தலைப்பு பஞ்சம், நடிகைக்கு துணி பஞ்சம் சொல்லினே போலாம்போல இருக்கே
Rate this:
karthik - Ooty,இந்தியா
14 ஜூலை, 2013 - 14:18 Report Abuse
karthik படதேல சொப்பன சுந்தரி வறுவல ??????
Rate this:
appu - madurai,இந்தியா
14 ஜூலை, 2013 - 19:09Report Abuse
appuவறுவல்,,,சுக்கா,,,முறுகல்,,பிரட்டல், பொரியல் எல்லோரும் வருவாங்கோ சாமியோவ்....தமிழ் வாத்தியாரோட பிள்ளையாக்கும் நீங்க...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 ஜூலை, 2013 - 17:26Report Abuse
சு கனகராஜ் தமிழை கொலை செய்யாதீர்கள்...
Rate this:
m.sekar - MADURAI,இந்தியா
14 ஜூலை, 2013 - 13:57 Report Abuse
m.sekar கௌண்டமணி மிகபெரிய நகைசுவை நடிகர் அவர் பெயரை கெடுத்து விடாதீர்கள்
Rate this:
Thamizhan - Bangalore,இந்தியா
14 ஜூலை, 2013 - 11:34 Report Abuse
Thamizhan பெற்றுமாஸ் லைட்டே தான் வேணுமாம் " எதையும் பட தலைபங்குங்க்ப
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
13 ஜூலை, 2013 - 19:25 Report Abuse
kumaresan.m " கதைக்கு தக்கவாறு தான் படத்தின் தலைப்பை வைக்க முடியும் அப்படியன்றால் நமது தமிழ் இயக்குனர்கள் கதையே தெரியாமல் படம் எடுக்கிறார்களா ???
Rate this:
Bava Husain - riyad,சவுதி அரேபியா
14 ஜூலை, 2013 - 03:32Report Abuse
Bava Husain"ஜெமினி" படத்தில் திரு.தாமு அவர்கள் கூறிய "மான் கராத்தே" என்பதும், சிவாவின் இன்னொரு படத்திற்கு தலைப்பாகியிருக்கிறதே.......
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in