ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருந்தும் அவர் தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது மூன்று தமிழ் படங்களில் நடித்து வரும் சுனைனாவின் பேட்டி...
* நீர்ப்பறவையில் எஸ்தராக நடித்த அனுபவம் பற்றி?
"வம்சம் படத்திற்கு பின், என்னை பேச வைத்த கேரக்டர் அது. அந்த கேரக்டருக்காக, கடலோர கிராமத்து பெண்ணாகவே என்னை மாற்றினார், இயக்குனர். அதனால், ”சுனைனா என்பதை கடந்து, எஸ்தராகவே நான் பேசப்பட்டேன். தொடர்ந்து, அதுமாதிரி வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன்.
* திடீர் திடீரென்று காணாமல் போய் விடுகிறீர்களே?
அதற்கு காரணம், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் நடித்து வருவது தான். தமிழில் நடிக்கிற படங்கள் வெற்றி பெறாததால், என்னால் இங்கு முழு கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது நடிக்கும் படங்கள், ஹிட்டாகும் பட்சத்தில், தமிழுக்கே முதலிடம் கொடுப்பேன்.
* நீச்சல் உடையில் நடித்த நீங்கள், இப்போது கிளாமராக நடிக்க மறுக்கிறீர்களாமே?
ஆரம்பத்தில் இருந்தே, மாடர்ன் கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுத்தேன். "காதலில் விழுந்தேன், மாசிலாமணி உட்பட சில படங்கள் மூலம் பேசப்படும் நடிகையானேன். ஆனால், "மைக் செட் பாண்டியில் பிகினி உடையணிந்து நடித்தும், கமர்சியலில் இடம் கிடைக்கவில்லை. அதற்காக, கவர்ச்சி வேடங்களை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
* "சமர் படத்தில் மிகச்சிறிய ரோலில் நடித்ததேன்?
விஷாலின் காதலி வேடம் என்றதால், ஒப்புக் கொண்டேன். ஆனால், படத்தில் நான் நடித்த சில சீன்கள் மட்டுமே இடம் பெற்றன. இருந்தாலும், அப்படத்தில், விஷாலுடன் நடித்தது மகிழ்ச்சியே."நம்பியார் என்ற படத்தில், சரோஜா தேவியாக நடிக்கிறீர்களாமே?ஆம். சரோஜா தேவி, அபிநய சரஸ்வதி என, புகழப்பட்ட நடிகை. ஒரு காலத்தில், தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியவர். அவ்வளவு புகழ் பெற்ற நடிகையின் கேரக்டரில் நடிப்பது, எனக்கு பெருமையான விஷயம். இந்த படத்தில் நடிப்பது, எனக்கு மனதளவில் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.