பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருக்கு ராஹா என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் தற்போது அவர்கள் மும்பையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆறு மாடியில் சொகுசு பங்களா ஒன்றை ராஹா என்ற பெயரில் கட்டி உள்ளார்கள். 250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவில் விரைவில் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் குடியேற போகிறார்கள்.
ஆனால் கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த சொகுசு பங்களாவை யாரோ வீடியோ எடுத்து அதை இணையத்தில் வைரலாக்கி உள்ளார்கள். இதனால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஆலியா பட். இதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛மும்பையில் இடவசதி குறைவாக இருப்பதால் ஒரு வீட்டின் ஜன்னல் இன்னொரு வீட்டை பார்த்தபடி தான் வீடு கட்ட முடியும். அதற்காக இதை வீடியோ எடுத்து வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்த வீடியோவை பதிவிட்டவர்கள் உடனே நீக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஆலியா பட்.