ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இரண்டு ஆண்டு இடைவெளிககுப்பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கும் வடிவேலு, தான் பிசியாக நடித்து வந்த காலகட்டத்தில்கூட மற்ற நடிகர்களின் பட விழாக்களில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், இப்போது மற்ற நடிகர்கள் சம்பந்தப்படட பட விழாக்களுக்கும் ஆஜராகி மீண்டும் பரபரப்பு கூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ விழாவுக்கு வருமாறு வடிவேலுவை அழைக்க சென்றார்களாம். அப்போது, வின்னர் படத்துல நான் வச்சிருந்த சங்கத்தின் பெயரிலேயே படம் எடுத்தீட்டீங்களா என்று கேட்டவர், சிறிது நேரம் பழைய நினைவுகள் அசை போட்டாராம். பின்னர் கண்டிப்பாக பங்சனுக்கு வர்றேன்னு வாக்குறுதி கொடுத்துள்ளாராம்.
இதனால், உற்சாகமாய் இருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படக்குழு. காரணம், வடிவேலு கலந்துகிடுறது ஒரு சந்தோசம்னா, வருத்தப்டாத வாலிபர் சங்கம் நடத்தின அவரே இந்த ஆடியோவையும் வெளியிடுறது இன்னொரு சந்தோசம்தானே என்கிறார்கள். இதையடுத்து, வடிவேலுவின் அபிமானிகள் தங்களது பட விழாக்களுக்கும் அவருக்கு அழைப்பு விடுக்க தயாராகி வருகிறார்கள். ஆக, இனி வடிவேலுவை நிறைய சினிமா விழாக்களில் பார்க்கலாம் என்று தெரிகிறது.