'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
75 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இயல்பான நடிப்பால் இந்தியத் திரையுலகை வசீகரித்து, தனது இன்றியமையா பங்களிப்பை வழங்கி, இன்றைய தலைமுறை கலைஞர்களோடும் இணைந்து இன்னமும் கலைப்பணியாற்றி வரும் ஈடில்லா திரை நட்சத்திரமாக இருப்பவர்தான் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. பெரும்பாலும் கண்களை ஈரமாக்கும் கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த இவர், 'இயக்குநர் சிகரம்' கே பாலசந்தர் இயக்கத்தில் “நீர்க்குமிழி”, “இருகோடுகள்” ஆகிய படங்களில் ஒரு பொறுப்புள்ள மாவட்ட கலெக்டராகவும், மருத்துவராகவும் வந்து தனது மாறுபட்ட நடிப்பை தந்ததோடு, அவரது “பாமா விஜயம்”, “எதிர் நீச்சல்”, “தில்லு முல்லு” ஆகிய படங்களில் தனது அசாத்திய நகைச்சுவை நடிப்பையும் வெளிப்படுத்தி, நகைச்சுவையில் ஒரு தனி முத்திரையும் பதித்திருப்பார். இவ்வாறு கே பாலசந்தரின் படைப்புகளில் தனது பண்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வந்த இவர், அவரது இயக்கத்திலேயே நடித்த ஒரு மாபெரும் கலை படைப்புதான் “காவியத் தலைவி”.
1963ம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழி திரைப்படம்தான் “உத்தர் ஃபல்குனி”. வங்காளத்திலும், ஹிந்தியிலும் அப்போது புகழ் பெற்ற நடிகையாக இருந்து வந்த நடிகை சுசித்ரா சென் நாயகியாக நடித்திருந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற, 1966ம் ஆண்டு ஹிந்தியிலும் “மம்தா” என்ற பெயரில் சுசித்ரா சென்னையே நாயகியாக நடிக்க வைத்து அங்கும் வணிக ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது இத்திரைப்படம். படத்தைப் பார்த்த நடிகை சவுகார் ஜானகி, தமிழில் இத்திரைப்படத்தை யார் தயாரிக்க முன் வந்தாலும் படத்தின் நாயகி கதாபாத்திரத்தை எப்படியாவது கேட்டுப் பெற்று நடித்து விட வேண்டும் என்ற ஆவலோடு இருந்தார்.
இதற்கு முன்னர் “பூல் அவுர் பத்தர்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகை மீனா குமாரி ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தை தான் ஏற்று நடிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு, எம் ஜி ஆரிடம் கேட்டுப் பெற்று நடித்திருந்தார். அவர் நடித்திருந்த அந்த திரைப்படம்தான் “ஒளி விளக்கு”. அவ்வாறே இந்த திரைப்படத்தின் நாயகி கதாபாத்திரத்தையும் தானே ஏற்று நடித்துவிட வேண்டும் என்றிருந்த நிலையில், யாரும் அந்தப் படத்தை தமிழில் தயாரிக்க முன் வராததால், அந்தக் கதாபாத்திரத்தின் மீது கொண்டிருந்த ஈர்ப்பின் காரணமாக தானே சொந்தமாக தயாரிக்க முன்வந்து “செல்வி பிலிம்ஸ்” என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட்டார். தனது ஆஸ்தான இயக்குநரான கே பாலசந்தரையே படத்தின் இயக்குநராக்கினார்.
சவுகார் ஜானகி சொந்தமாக தயாரித்திருந்ததோடு, அம்மா, மகள் என இரட்டை வேடங்களில் தானே நடித்தும் இருந்தார். 1970ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியும் பெற்றது. நடிகை சவுகார் ஜானகியின் கலையுலகப் பயணத்தின் காவியப் படைப்புகளில் ஒன்றாகவும், இன்றும் ரசிகர்களின் போற்றுதலுக்குரிய ஒரு திரைப்படமாகவும் இருப்பதுதான் இந்தக் “காவியத் தலைவி”.