'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை சோனா ஹெய்டன். அஜித் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கடந்த 20 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது தனது சொந்த வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் வெப் சீரிசாக இயக்கி, தானே நடிக்கவும் செய்கிறார். ஆனால் இந்த வெப் சீரிசை தொடரக்கூடாது, அதை வெளியிடவும் கூடாது என்று பலர் தன்னை மிரட்டி வருவதாக கூறியுள்ளார்.
ஒரு கும்பலே எதிர்த்தார்கள்
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பிரச்னைகளே வேண்டாம் என்று தான் ஒதுங்கி இருந்தேன். பயோபிக் என ஆரம்பித்ததுமே ஒரு ஆள், இரண்டு ஆள் இல்லை, ஒரு கும்பலே வந்து குதித்தார்கள். எனக்கு நன்கு தெரிந்த ஒரு நடிகர், தயாரிப்பாளர் கூட என்னிடம் கடுமை காட்டியது ஏன் என்று தெரியவில்லை. நான் எவ்வளவு ஒதுங்கிப் போனாலும் என்னை அடிக்கிறீர்கள் என்றால் இனி நான் பேசினால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற தைரியம் வந்துவிட்டது. அப்போது கூட என் தரப்பு நியாயத்தை தான் நான் சொல்ல இருக்கிறேன்.
இந்தப் புராஜெக்ட்டை நான் கையில் எடுத்திருப்பது பழிவாங்குவதற்கான எண்ணம் கிடையாது. சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தை மனதில் கொண்டு அவர்களின் பெயர்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை. ஓடிடி தளத்திலிருந்து பணம் பெற்று இந்த புராஜெக்டை தொடங்கினேன். டைரக்சன் எனக்கு பிடிக்கும். அப்படி ஒரு படம் எடுக்கும்போது எனக்கும் நல்ல பெயர் கிடைக்கும், கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை மாற்றும் என சிறுபிள்ளைத்தனமான ஒரு ஆசை இருந்தது. அதனால் ஒரு இயக்குநரான பின்னர் கூட என்னுடைய சொந்த கதையைத்தான் படமாக எடுக்க முடிவு செய்தேன்.
பேச வைத்து விடாதீர்கள்
ஒவ்வொரு கட்டத்திலும் இதை செய்யாதே, அதை செய்யாதே என்று எதிர்ப்பு வரும் போது நான் என்னதான் செய்வது? நான் என்ன அப்படி தப்பான ஆளா என்கிற விரக்தி தான் ஏற்பட்டது. தனி ஆளாக போராடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை இந்த வெப் சீரிஸுக்காக 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறேன். முதல் பத்து நாட்கள் நடத்தி முடித்துவிட்டு மீதி நான்கு நாட்கள் படப்பிடிப்பை நடத்த ஆறு மாதம் பிச்சை எடுத்தேன்.
தயவுசெய்து என்னை வாயைத் திறந்து எதுவும் பேச வைத்து விடாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்.. 200 ரூபாய் இருக்கும்போது கூட நான் பிச்சை எடுக்கவில்லை.. ஆனால் இயக்குநரான பிறகு பிச்சை எடுத்தேன்.. இந்த 'ஸ்மோக்' வெப்சீரிசை துவங்கும்போது ஒரு பத்து பேர்களைப் பற்றிய விஷயத்தை, அவர்கள் குடும்பத்தை பாதிக்காதவாறு சொல்வதற்கு திட்டமிட்டேன். ஆனால் அறிவித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.. 50 பேரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அப்போதுதான் தெரிந்தது இந்த 40 நம்ம பேர் லிஸ்டிலேயே இல்லையே என நினைத்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.