'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் 2018 டிசம்பர் மாதம் வெளியான படம் 'மாரி 2'. அப்படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.
யுவனின் அதிரடியான இசை, தனுஷ், தீ ஆகியோரது குரலில், தனுஷின் பாடல் வரிகள் பட்டையைக் கிளப்பியது. அடுத்தடுத்து பல புதிய சாதனைகளை அந்தப் பாடல் படைத்தது. படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆன பிறகும் இன்னமும் யு டியுப் தளத்தில் அப்பாடலை தினமும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டுகிறது.
கடந்த மாதம் 87 லட்சம் பார்வைகளும், இந்த மாதத்தில் ஆறு நாட்களில் 14 லட்சம் பார்வைகளும் அப்பாடலுக்குக் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த 2025ம் வருடத்தில் மட்டும் 21 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது.
மொத்தத்தில் தற்போது 1650 மில்லியன் பார்வைகளை யு டியுப் தளத்தில் கடந்துள்ளது. இந்திய சினிமா பாடல்களில் இப்பாடல்தான் முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை கடந்த ஏழு வருடங்களில் வேறு எந்த ஒரு இந்திய மொழி திரைப்படப் பாடலும் முறியடிக்கவில்லை.