தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |
விக்ரம் பிரபு நடிக்கும் "அரிமா நம்பி" படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி. பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, உலகம் முழுக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இவர் டிரம்ஸ் அடிக்கும் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமானது. ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும் இவரது டிரம்ஸ் இசை. இந்நிலையில், இதுவரை டிரம்ஸ் கலைஞராக இருந்து வந்த சிவமணி, முதன்முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கும்கி படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு அடுத்தப்படியாக "அரிமா நம்பி" என்ற படத்தில் நடிக்கிறார். விக்ரம் பிரபு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். ஆனந்த் குமார் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தபடத்தில் தான் சிவமணி இசையமைப்பாளராகி இருக்கிறார்.
இசையமைப்பாளரானது குறித்து சிவமணி கூறியுள்ளதாவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்திற்கு இதுவரை நான்கு பாடல்களை கம்போஸ் பண்ணிவிட்டேன். முதல்பாடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து கம்போஸ் பண்ணினேன். பொதுவாக என்னுடைய படங்களின் இசையில் டிரம்ஸ் கொஞ்சம் வேகமாக இருக்கும். அதேப்போல் இந்தபடத்திலும் அது தொடரும். அதேசமயம் மெலோடியும் நிறைய இருக்கும். ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு இந்தபடத்தின் இசை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வித்தியாசமாக செய்கிறேன் என்று வலிய போய் இசை திணிக்க நான் விரும்பவில்லை, கதைக்கு என்ன தேவையோ அந்த இசையை நான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.