சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
வாமனன் படத்தில் ஜெய்யுடன் நடித்தவர் ப்ரியா ஆனந்த். அந்த படத்தின் தோல்வி காரணமாக அடுத்து கோலிவுட் படமில்லாமல் தெலுங்கு, இந்தி வரை சென்றார் ப்ரியா. ஆனால், எந்த மொழியிலும் அவரால் பரபரப்பான நடிகையாக முடியவில்லை. அதனால் மீண்டும் தமிழுக்கு வந்த அவர், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்தார். இதில் எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்தை பேச வைத்ததால், இப்போது அதிரடியாக சில படங்களை கைப்பற்றி விட்டார்.
இதனால் புதிய படங்களில் நடிக்க அவர் தனது படக்கூலியை ஒரு கோடியாக உயர்த்தி விட்டதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் ப்ரியா ஆனந்த். காரணம், ஒரு கோடி ரூபாய் தந்தால்தான் நடிப்பேன் என்று கறாராக பேசும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. இப்போதும் எனக்கென தயாரிப்பாளர்களாக என்ன சம்பளம் நிர்ணயிக்கிறார்களோ அதைத்தான் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், இன்னும் நான் 50 லட்சத்தைகூட தொடவில்லை என்கிறார்.
மேலும், சில நடிகைகளெல்லாம் வந்து ஓரிரு படங்களிலேயே கோடியை தொட்டு விடுகிறார்கள். ஆனால் நான் சினிமாத்துறைக்குள் வந்து பல வருடங்களாகி விட்டது. அதோடு, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியும் எனக்கு தெரியும். இருப்பினும், எனக்கான சம்பளம் ஆமை வேகத்திலேயே உயர்கிறது என்றும் பீல் பண்ணுகிறார் ப்ரியாஆனந்த்.