சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். அந்த படத்தையடுத்து இப்போது வை ராஜா வை, சிப்பாய் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வாரம் லட்சுமிமேனனை காதலிப்பது போல் நடிததால், அதற்கடுதத வாரம் ப்ரியாஆனந்தை காதலிக்கிறார். இரண்டு படங்களுமே காமெடி கலந்த காதல் கதைகள் என்பதால் தனது வயசுக்கேற்ப அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார் கெளதம். அதோடு, ஸ்பாட்டில் மேற்படி நடிகைகளுடன் ரொம்ப ஜாலியாகவும் அரட்டையில் ஈடுபடுகிறார்.அவரிடத்தில், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த் இரண்டு பேரில் யார் உங்களுக்கு அதிக பிடித்தமான நடிகை? என்று கேட்டால், இரண்டுபேருமே எனக்குப்பிடித்தமான நல்ல நடிகைகள்தான் என்கிறார். அதோடு, அவர்கள் இருவருமே என்னை விட சீனியர்கள். அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்கள். என்றபோதும், எங்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லாமல், நல்ல நண்பர்களாக நடித்து வருகிறோம். மேலும், அவர்களும் என்னை மாதிரியே ஜாலியாக பழகுவதால், ஸ்பாட்டில் நேரம்போவதே தெரியவில்லை. நடிக்கிற நேரம்போக மற்ற நேரங்களில் ஒரே அரட்டைதான் என்கிறார் கெளதம.