கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
ஒரு சிறிய புள்ளி கிடைத்தால் போதும், அதை வைத்து, பெரிய கோலமே போட்டு விடுவர், மலையாள திரைப்பட இயக்குனர்கள். இந்த படத்திலும், ஒரு சிறிய விஷயத்தை கையில் எடுத்து, படம் பார்க்கும் ரசிகர்களை, பரவசப்படுத்தும் வகையிலான காட்சிகளை படமாக்கியுள்ளனர். ஆகஸ்ட் கிளப்பில், உறுப்பினர்களாக இருக்கும் நண்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் தான், படத்தின் கதை. இந்த கிளப்பின் உறுப்பினராக இருக்கிறார், ரீமா கல்லிங்கல். அமைதியாக சென்று கொண்டிருக்கும், ரீமாவின் வாழ்க்கையில், கிளப்பிற்கு புதிதாக வந்து சேரும், இளைஞர்களால், திடீர் திருப்பம் ஏற்படுகிறது.இதை, அனைவரும் ரசிக்கும் வகையில், படமாக்கியுள்ளார், இயக்குனர், வேணு. ரீமாவுடன், முரளி கோபி, சுகுமாரி, மாலா அரவிந்த், ப்ரவீணா ஆகியோரும் நடித்துள்ளனர்.