ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் படத்தின் டைரக்டரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா. எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில், 3டியில் தயாராகும் முதல் இந்திய படம் இதுவாகும். இதில் ரஜினிக்கு அப்பா - மகன் என இரண்டு வேடம். இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் ஷோபனா, ஜாக்கி ஷெராப், ருக்மணி, சரத்குமார், ஆதி, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து டப்பிங், சவுண்ட், அனிமேஷன் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே கோச்சடையான் படத்தின் இரண்டு ஸ்டில்களை வெளியிட்டு இருந்த செளந்தர்யா இப்போது மூன்றாவதாக ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு ரஜினிகள் படம் இடம்பெற்றுள்ளது. கோச்சடையானில் ரஜினியை மிக மிக இளமையாக, காட்டியுள்ளனர். இணையதளங்களில் இந்த ஸ்டில்தான் வேகமாக பரவி வருகிறது.