மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தனது தாயார் பெயரிலும், ராகவேந்தர் பெயரிலும் அறக்கட்டளை நடத்தி வரும் ராகவா லாரன்ஸ் தற்போது 'சேவையே கடவுள்' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இதில் நடிகர், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செப் வினோத், அறந்தாங்கி நிஷா இணைந்து செயல்படவுள்ளனர்.
இந்த அறக்கட்டளை மூலம், முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், 10 டிராக்டர், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது: 2 மாதம் முன்பு எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கோவிலுக்கு போய் வந்த நாள், ஒரு கனவு அதை நினைத்து கண்களில் தானாக கண்ணீர் வந்தது. அதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம். நான் அதைச் செய்யப் போகிறேன். இதைச் செய்யப்போகிறேன் என சொல்ல மாட்டேன், செய்துவிட்டு சொல்கிறேன்.
எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் மட்டுமல்ல இந்த பணியிலும் என்னுடன் இணைந்துள்ளார். இது கடவுளின் ஆசிர்வாதம். இணைந்து பயணிப்போம். என்னை இந்தளவு வளர்த்தெடுத்தது என் தாய் தான். சின்ன வயதில் என் அம்மா, என்னை எம் ஜி ஆர் மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் எம் ஜி ஆர் அளவு இல்லையென்றாலும் அவரில் சிறியளவிலாவது நான் செயல்படுவேன். என்றார்.