நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை ஸ்ருதிஹாசன் அவரது இரண்டாவது காதலரான சாந்தனு ஹசரிகாவுடன் நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு திடீரெனப் பிரிந்துவிட்டார். எப்போது திருமணம் செய்வது என்பது குறித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல் வெளியானது.
மும்பையில் ஒரு அபார்ட்டிமென்ட்டில் வசித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவரது தங்கை அக்ஷரா ஹாசனும் மும்பையில்தான் இருக்கிறார். நேற்று தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “நான் ஒளியை உணர்கிறேன். இந்தத் தருணங்களுக்காக நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக, நன்றியுள்ளவளாக உணர்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
காதலருடன் இத்தனை நாள் வாழ்ந்ததை இருட்டில் உள்ளதைப் போன்று குறிப்பிடவே, தற்போது 'நான் ஒளியை உணர்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார் போலிருக்கிறது.