நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒரு காலத்தில் தனது துறையில் உச்சத்தில் இருந்து விட்டு கடைசி காலத்தில் கஷ்டத்தில் வாழ்ந்தவர்கள் சினிமாவில் அதிகம். தியாகராஜ பாகவதர் தங்க தட்டில் சாப்பிட்டு விட்டு, மாம்பலம் ரயில் நிலையத்தில் பசியால் படுத்துக் கிடந்தார். சாவித்ரி சொகுசு காரில் பயணம் செய்து விட்டு கடைசி காலத்தில் கை ரிக்ஷாவில் பயணித்தார். இப்படி நிறைய இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம்.
சினிமா இசை வாய்ப்பு தேடி சென்னை வந்த சுதர்சனம் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஏவிஎம் நிறவனத்தில் மாதச் சம்பளத்திற்கு பணியாற்றும் இசை அமைப்பாளர் ஆனார். 'சகுந்தலை' படத்தில் தொடங்கிய இவர் பயணம், நாம் இருவர், வேதாள உலகம், வாழ்க்கை, ஓர் இரவு பராசக்தி, களத்தூர் கண்ணம்மா, தெய்வபிறவி, நானும் ஒரு பெண், பூம்புகார் என தொடர்ந்தது.
தமிழ்த் திரை உலகின் ஜாம்பவான்களாக வளர்ந்த பலருக்கு இவர்தான் அறிமுக இசை அமைப்பாளர். பராசக்தி சிவாஜியில் தொடங்கி, களத்தூர் கண்ணம்மா கமல்ஹாசன், வாழ்க்கை வைஜெயந்தி மாலா, கன்னட நடிகர் ராஜ்குமார் இப்படி பலரின் முதல் பட இசை அமைப்பாளர் இவர். டி எம் சவுந்தரராஜன் உள்ளிட்டோரை பாடகர்களாக அறிமுகப்படுத்தியவர்.
புதியவர்களின் வருகை, புதிய இசை கருவிகளின் வருகையால் வாய்ப்பு இழந்த சுதர்சனம் தனது கடைசி காலத்தில் மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுத்து அந்த வருமானத்தில் வாழ்ந்து மறைந்தார். அவரது 110வது பிறந்த நாள் இன்று.